வீரம் வெளஞ்ச மண்ணு!
- பாவலர் மாயோன்மங்கை
வீரபாண்டிய வம்சத்தப்
பார்த்தேன்
வீரமான நடையைப்
பார்த்தேன்
பாரதியின் மீசையைப்
பார்த்தேன்
பார் புகழும் வீரவசனம்
கேட்டேன்
முல்லை ஆத்துத் தண்ணியிலே
மெல்ல நீந்தும் மீனைப்
பார்த்தேன்
பெண்களுமே புலியைக்
கண்டால்
முறத்தாலே அடித்து விரட்டப்
பார்த்தேன்
சேரநாட்டு யாணையைப் போலே
செந்தமிழன் வீரம்
பார்த்தேன்
தஞ்சை கொண்ட சோழன்
அமைத்த
நிழல் வீழா கோபுரம்
பார்த்தேன்
பிட்டுக்காகப் பிரம்படிபட்டு
பித்தனவன்
விளையாட்டைப் பார்த்தேன்
யாணைகொண்டு போரடித்த
சேனை வென்ற மறவர்
பார்த்தேன்
நீதிக்காகத் தன் சிசுவைத்
தேர்க்காலில் கொன்றதைப்
பார்த்தேன்
புறாவிற்கு தன் சதையைக்
கொடுத்த
சிபிவள்ளல் கொடையைப்
பார்த்தேன்
கோவிலுக்கு ஏன் செல்லவேண்டும்
தாய் தானே தெய்வம்
என்று
முகமது நபிகள் முழங்கிய
அறத்தைப் பார்த்தேன்
தூதனாய் மண்ணிலே வந்த
இயேசுவை நானும்
பார்த்தேன்
இயற்கையைக் கடவுளாக
வணங்கிய மக்களைப் பார்த்தேன்
மண்ணுக்கு நன்றி சொல்லும் மகத்தான
மனிதனைப் பார்த்தேன்
சோறுவடிநீர்க் கஞ்சியிலே
சேற்றுவயல் உழுவதைப்
பார்த்தேன்
மண்ணைப் புகழும் புலவர்களுக் கெல்லாம்
மணிமுடியே பணிவதைப்
பார்த்தேன்
நட்புக்காக சரித்திரம்
கண்ட
இதிகாச வரலாறைப்
பார்த்தேன்
தமிழ் மண்ணில் வீரம்
கண்டேன்
தலைவன் தலைவி காதலைக் கண்டேன்
திண்ணை வைத்து
விருந்து படைத்த
விருந்தோம்பல் தமிழன் நாமே
ஏறுதழுவுதல் ஆணுக்கு அழகு
வீர மகனை விரும்பும் பெண்களைப்
பார்த்தேன்
உரைப்பார் யாரோ?
தினையளவுகூட நான் செல்லவில்லை
திகழும் நம் மண்ணின்
பொறுமை