எதிர்கால தலைமுறைக்கு பசுமை நிறைந்த உலகை விட்டு செல்வோம்!
- பசுங்கிளி
சுற்றுச்சூழலை பாதுகாப்போம் சுகாதாரமாக வாழ்வோம். தூய்மையான சுற்று சூழல் என்பது நம் உடலுக்கும் மனதுக்கும் தேவையானது. தூய்மையான காற்று, சுத்தமான குடிநீர், மாசில்லாத நிலம் ஆகியவை வாழ்வின் அடித்தளம்.
மரங்களை வெட்டி அழிப்பதை தவிர்த்து மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பது நம் ஒவ்வொருவரின் பொறுப்பு. வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம். சின்ன வயதிலேயே குழந்தைகளுக்கு செடி வளர்க்க கற்றுக்கொடுக்கலாம். வீட்டிற்கு தேவையான காய்கறிகள் நம் வீட்டு தோட்டத்திலே வளர்க்கலாம். மாடித்தோட்டம் அமைக்கலாம்.
வாகனப்புகை தொழிற்சாலைப் புகையைக் குறைத்து, தூய்மையான காற்றை பாதுகாக்க வேண்டும். நீரின்றி அமையாது உலகு என்பது உண்மை. ஆறுகள், குளங்கள் ஏரிகள் போன்ற நீர் நிலைகளை குப்பைகளால் மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டும். இன்றைய காலத்தில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பொருட்களை தவிர்த்து துணிப்பைகளை உபயோகிக்கலாம். சுற்றுச்சூழலை சுகாதாரமாக வைக்க பழகுவதை நம் வீட்டிலிருந்தே தொடங்கலாம். முதலில் குப்பையை எங்கே வேண்டுமானாலும்
வீசிவிடலாம் என்ற பழக்கத்தை மாற்ற வேண்டும். ஒவ்வொரு வீடும் தங்களுடைய குப்பைகளை சரியாக பிரித்து மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தனியாக பிரித்து குப்பை தொட்டிகளில்சேர்த்தால் மறுசுழற்சிக்கு செய்யும் வாய்ப்பு அதிகரிக்கும். மண் நீர் மாசுபடாமல் தடுக்க முடியும்.
பள்ளி மட்டத்தில் ஒரு மாணவனுக்கு ஒரு மரம் என்ற இயக்கத்தை நடைமுறைப் படுத்தினால் சிறு வயதிலிருந்தே மரங்களை நேசிக்கும் பண்பை உருவாக்கலாம். மரங்களை பாதுகாப்பதால் நம்முடைய சுற்றுப்புறம் வெப்பத்தை குறைத்துபறவைகள் வாழும் இடங்களை பெருக்கி நமக்கு தேவையான ஆக்சிஜனை வழங்குகிறது. நீர் வளத்தை பாதுகாப்பதற்காக, மழை நீர் சேகரிப்புகளை ஒவ்வொரு வீட்டிலும் செயல்படுத்துவோம்.
மழை நீரை வீணாக்காமல் சேமித்தால் எதிர்கால தலைமுறைக்கும் போதுமான நீர் இருக்கும் விவசாயம் செழிக்கும், வெப்பத்தால் ஏற்படும் சிரமங்கள் குறையும், நம்மால் செய்யக்கூடிய சிறிய முயற்சிகளில் இருந்து தொடங்கலாம்.
வீட்டின் முன் ஒரு செடி வளர்ப்பது, கூட ஒரு மாற்றமே நம் வாழ்க்கை முறையை சிறிது மாற்றினாலே இயற்கையை பாதுகாக்கவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் நம்மால் முடியும்.
சுற்றுச்சூழலைச் சுத்தமாக வைத்திருப்போம். சுகாதாரமான வாழ்க்கையை வாழ்வோம். எதிர்கால தலைமுறைக்கு ஒரு பசுமை நிறைந்த உலகை விட்டு செல்வோம்.