நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று!
- பசுங்கிளி
திருச்சிற்றம்பலம்
என் வீட்டு தோட்டத்தில்
செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினேன்
செழித்து வளர்ந்த செடிகள்
என்னை பார்த்து நன்றி கூறின
என்னை வாட விடாமல் தண்ணீர் ஊற்றி வளர்த்ததற்கு நன்றி என்றன
பூக்கள் பூத்தது
அந்த பூக்கள் என்னை பார்த்து சிரித்தது
என்னை பறித்துக்கொள்
காலை பிறந்த நான் மாலையில் உதிர்ந்து விடுவேன் என்றது
நானும் அந்த பூக்களை மென்மையாக பறித்தேன்
அந்த பூக்கள் என்னிடம்
நானே மென்மையானவள்
பூக்களை விட மென்மையாக பறித்ததற்கு நன்றி என்று கூறின
தோட்டத்தில் உள்ள வாழை நாரை எடுத்து வந்து
பூக்களை மாலையாக தொடுத்தேன்
அந்த வாழை நார் என்னை பார்த்து காய்ந்து
குப்பையில் போடும் என்னை மலர்களோடு சேர்த்து
மணம்வீச செய்ததற்கு நன்றி என்று கூறின.
பூக்களை தொடுக்கும் போது
விரல்கள் என்னைப் பார்த்து
எத்தனையோ வேலை செய்த என்னை
இறைவனுக்கு மாலை தொடுக்க பயன்படுத்தியதற்கு நன்றி என்றது
கோவிலுக்கு சென்று மாலையை இறைவனுக்கு சாத்தினேன்
இறைவா உன்னை நினைப்பதற்கு மனமும்
உன்னை காண்பதற்கும் கண்களும்
உன்னை வணங்க கைகளும்
உன் சன்னதிக்கு வர கால்களும்
உன் நாமத்தை கேட்க செவியும் தந்தமைக்கு நன்றி என்று இறைவனிடம் கூறினேன்.
நன்றி மறப்பது நன்றன்று
நன்றல்லது அன்றே மறப்பது நன்று