விரதம் என்னும் பயிற்சி

Sep 30, 2026,01:22 PM IST

- பன்முகக் கவிஞர் க. முருகேஸ்வரி


விரதம் என்பது பட்டினி அல்ல....

விரும்பி ஏற்க வேண்டிய பயிற்சி...


வேண்டாததை வெறுத்து 

விரும்பியதை நிறுத்தும் பயிற்சி...


மனத்தை ஒரு நிலைப்படுத்த ...

அழுக்கை அகற்ற...


ஆசையை வெல்ல....

ஆரம்பிக்க வேண்டிய

அத்தியாவசியமான பயிற்சி....


மௌன விரதம் 

பேச்சை நிறுத்தி....




அன்பைப் பெருக்கி

கோபம் சுருக்கி....


குணத்தை உயர்த்தும் பயிற்சி...


உண்ணாவிரதம் ....


அது பசியை அடக்குதல் அல்ல...

மனதை பக்குவப்படுத்தும் பயிற்சி


செரிமானம் சீராக....

எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஏற்கும் பயிற்சி


இறையருள் பெற....

இறைநம்பிக்கையோடு நாம் ஏற்கும்‌ 


நற்பலன்கள் நிறைந்த 

நல்லதொரு பயிற்சியே


இவ்விரதப் பயிற்சி...


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். தமிழ்நாடு அரசின் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்