சின்னஞ் சிறிய சிட்டுக்குருவியே!
Jul 22, 2026,01:54 PM IST
- பசுங்கிளி
சின்னஞ் சிறிய சிட்டுக்குருவியே
உன் வரவை எண்ணி காத்திருக்கிறேன்
உண்ண உணவும் நீரும்
வைத்து காத்திருப்பேன்
நீ வருவாயென
நீ சின்னஞ்சிறிய சிறகை விரித்து பறந்துவா
என் வீட்டின் மதில் சுவற்றில் அமர்ந்து
கீச்கீச்சென்ற உனது குரலின் பாஷை எனக்கு புரியும்
நீ என்னை எதிர்பார்த்து
உன் தலையை சாய்த்து
உன் ஓர விழியால்
என்னை பார்க்கும் போது
நான் உன்னை ரசிக்கிறேன் மகிழ்கிறேன்
உன்னை என் வீட்டில் கூண்டில் வைத்து
உன்னோடு பேச வேண்டும் என்று ஆசைதான்
வேண்டாம் நீ சுதந்திரமாக பறந்து சென்றுவா
கூண்டில் அடைத்து வைக்க நான் சுயநலவாதி அல்ல
நான் என்றுமே உன் தோழிதான்