அது ஒரு அழகிய மழைக்காலம்
Jun 23, 2026,03:48 PM IST
- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
மாதம் மும்மாரி
மழை பெய்த காலம்
அது ஒரு அழகிய
மழைக்காலம்!
பருவ மழை பொய்க்காமல்
மழை பெய்த காலம்
அது ஒரு அழகிய
மழைக்காலம்!
பெய்யெனப் பெய்யும் மழை
என்று யாரோ கூறியது போல்
மழை பெய்த காலம்
அது ஒரு அழகிய பொற்காலம்!
விவசாயிகள் மனம் குளிரும்படி
மழை பெய்த காலம்
அது ஒரு அழகிய
மழைக் காலம்!
மரங்களை எல்லாம் வெட்டி
குளங்களை எல்லாம் வீடாக்கி
மழை பெய்யுமா என்று ஏங்கி
வாழும் இக்காலம் என்ன காலம்?
இப்படியே போனால்
என்று கூறும் வருங்காலம்!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்)