குழந்தை
Jul 23, 2026,12:21 PM IST
- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
வெள்ளி ரதம் போல வந்த
தங்க மகன் எனக்கு!
சிந்தையெலாம் நிறைந்திட்ட
சிங்க மகன் எனக்கு!
தங்கம் எனத் தரணியிலே
வந்த மகன் எனக்கு!
அவன் பெருமை பேசுவதில்
மனமகிழ்ச்சி எனக்கு!
அவன் வீர நடை பயில்கையில்
மகிழ்ச்சி அலை மனதுக்கு!
அவன் மழலை மொழி கேட்பதில்
அமிர்த மழை மனதுக்கு!
வரம் என வந்த அவன்
கடவுள் தந்த பரிசு எனக்கு!
நன்றி சொல்லத்தான்
ஜென்மம் எனக்கு!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்).