விநாயகர் துதி
Jun 20, 2026,12:21 PM IST
- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
ஆதி கணபதியின் அடி தொழுதுத்
துவங்குகிறேன் கவி எழுத!
அந்த ஆதிசக்தி மகன் எனக்கு
அடி எடுத்துத் தர வேண்டும்!
சிந்து கவி நான் எழுத சிவன்
மகன் இவன் உதவ வேண்டும்!
ஆனைமுகன் மனமிரங்கி
அடியேனைக் காக்க வேண்டும்!
சந்தக் கவி நான் எழுத
சக்தி மகன் அருள வேண்டும்!
வலம்புரி விநாயகர்
வாழ்வு தர வரவேண்டும்!
சிவனின் மூத்த பிள்ளை !
சிறப்புகளைத் தர வேண்டும்!
கருணைக் கடல் போல
கணபதி இவர் அருள் புரிய,
பொருநை நதி போல
பொங்கு கவி நான் எழுத,
அருளைத் தர வேண்டும்!- அந்த
ஆனைமுகன் கணபதியே!
அவர் இருப்பதனால்
எப்போதும் மகிழ்கின்றேன்!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்)