திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்!

Jun 20, 2026,11:20 AM IST

- சிவ.ஆ. மலர்விழி ராஜா


ஓம் முருகா சரணம் 


பிரணவ மந்திரத்தின்

முழுமுதல் பொருளே....!


சிவமுகம் தோற்றத்தில் 

ஒருமுகமாக சேர்ந்தவனே....!


சிவசக்தி வடிவமாக 

ஒன்றென அமைந்தவனே....!


இரண்டும் ஒன்றென உருவாக தோன்றி....


சிரஞ்சீவியென இளமை

பொருந்திய அழகிய திருமகனே.....!


இரண்டு பிறப்புகளாகிய

அந்தணர் குல திலமே.....!


ஒப்பற்ற குலத்தில் 

ஒருவனாக திருஞானசம்பந்தராக

அவதரித்தவனே....!




முன்பொரு நாளில்

பிரணவ மந்திரத்தின்

பொருள்அறியாத


பிரம்ம தேவனாகிய

நான்முகன் தலையில் 

திருகரங்களால்

குட்டிய அழகனே.....!


அரி ஹரன் இந்திரன் 

மூவரும்  உன்னை பணிந்து முறையிட....


பிரம்மனை அடைத்த சிறையினின்று விடுத்தாய் முருகா.....!


நீரால் சூழ்ந்த நிலங்கள்

நான்கும் அஞ்சி நடுங்க


நொடி பொழுதினில்

இரண்டு சிறகுகள் உடைய.....


மயில் மீதேறி உலகை வலம் வந்த முருகா......!


இந்திர தேவனின் ஐராவத்தின் தந்தங்கள்

நான்கும்.....


இரண்டு செவிகளும்  துதிக்கை ஒன்றுடைய....


மதம்பிடித் தொழுகும்

மலைபோன்ற யானைஉடைய 

இந்திரன் மகளாம்......


தேவயானை கரம்பற்றிய வேலா....!


யானை வடிவினில்

மும்மதம் பெருகி 

வந்தகிழ யானைக்கு....


முன்பிறந்த சகோதரனாய் விளங்கிய தேவா.....!


ஐந்து கை கடவுள் 

அருகம்புல் சூடிய

கணபதியின் இளைய

சகோதரனே.....!


ஐந்தெழுத்து மந்திரம் பஞ்சாச்சரத்தினால்.....


நான்கு வேதங்களாலும்

உணர்த்திய கடவுள் 

ஒருவரே.....!


மூன்று கண்களையுடைய

நல்வினை தீவினை

இரண்டிற்கும்.....


மருந்தாக விளங்கும் 

சிவபிரானே.....!


ஒப்பற்ற குருவாய்

விளங்கும் முருகா.....!


முன்பொரு நாளிலே

உமைஅம்மையின்

ஞானப்பால் அருந்தி......


இயல் இசை நாடகமெனும் முத்தமிழில் வல்லவனாக

வளர்ந்தாய் குமரா......!


நால்வகை கவியிலும்

அரசனாக.....


ஐம்புலன் தனக்கு அடிமை படுத்திய.....


ஆறுமுகங்களை உடைய.... ஷண்முகனே.....!


அழகில் சிறந்த அழகனாக

சீர்காழிப்பதியில்......


திருஞானசம்பந்தராக

அவதரித்தவனே.....!


கார்த்திகை பெண்கள் 

அறுவரின் புதல்வனாகிய

வேலவனே.....!


ஐம்பெரும் விருட்சங்கள்

காட்சி தரும் தேவலோக

சக்ரவர்த்தியே......!


நான்கு வேதங்களைப் போல் ரகசியமானதும்.....


மூன்று சிகரங்களை உடையதுமான


கிரௌஞ்சம் மலையை

இரண்டாக பிளந்திட.....


ஒப்பற்ற வேலினை செலுத்திய வேலாயுதனே......!


காவிரியின் வடபுரத்தில் விளங்கும் சுவாமி மலையில்......


ஆறெழுத்து மந்திரமாம்

சரவணபவ எனும் 

ஷடாக்ஷர மந்திரத்தை......


ஓதும் அந்தணர்கள் உனது பாதகமலங்களை

போற்றிட......


ஏரகத்து இறைவனாக

திருவேரகத்தின் சுவாமிநாதனே.....!


அருளிடும் முருகா

உனது திருவடி.....


போற்றி...! போற்றி....!

ஓம் சரவணபவ

ஷண்முகா போற்றி....!

போற்றி....!


ஓம் முருகா சரணம் 


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தொகுதி மறுவரையறை.. அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அழைப்பு!

news

Double Meaning talks: மனிதர்கள் எப்போது டபுள் மீனிங் + கெட்ட வார்த்தையில் பேச ஆரம்பிக்கிறார்கள்?

news

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026 : அறிவிக்கப்பட்ட திட்டங்களும், ஒதுக்கப்பட்ட நிதியும்

news

தமிழக வேளாண் பட்ஜெட் விவசாயிகள் ஏமாற்றம்...எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

news

புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையனுடன் அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் திடீர் சந்திப்பு

news

பிரதமர் மோடியின் 2026-ஆம் ஆண்டு வெளிநாட்டு பயணச் செலவு: மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

news

“வெற்றிப் பயணம் தொடரட்டும்!”: அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

news

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026-27: திமுக, தேமுதிக.,வின் கருத்து என்ன?

news

முருக பக்தியின் மகத்துவம் பேசும் ஆடி கிருத்திகை –காவடி, பால்குடம், பக்தி பேரலை

அதிகம் பார்க்கும் செய்திகள்