புவி மகள் போற்றும் நதி மகளே!

Su.tha Arivalagan
Aug 01, 2026,04:14 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


புவி மகள் போற்றும் 

நதி மகளே! 

கலை மகள் வாழ்த்தும் 

குல மகளே! 


எப்போதும் எனை நேசிக்கும்

திருமகளே! 

முப்போதும் உனை நினைக்கும் 

நான் ஒரு கவிஞனே!


பூ வனமாய் நான் இருக்கிறேன் 

தாழம் பூவே! 

எழிலுக்கு எழில் சேர்க்கும் 

என்னுயிரே! 




நீ நிலவா மலரா

ஓவியமே! 

என் நினைவே நீதான்

காவியமே!


நீ மொழியினில் அழகிய 

செந்தமிழே! 

என் சித்திரை வானத்துப் 

பௌர்ணமியே!


இமை மூடித் தூங்குகையில் 

வரும் கனவே! 

எப்போதும் எனை மகிழ்விக்கும் 

இனிய நினைவே!


கார் கூந்தல் கலையாத 

மேகமே! 

நீ இருக்கையில் எனக்கில்லை 

சோகமே! 


வாழ்வாங்கு நாம் வாழ்வோம் 

பூரணமே! 

நமை வாழ்த்திட  வருவரோ 

வானவரே! 


என் இதயத்தில் குடியிருக்கும் 

தேவதையே! 

நாம் நன்றி கூறி வணங்கிடுவோம் 

அந்தத் தெய்வத்தையே!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்).