தெய்வமாய்த் தெரியும் தேவதை போல் ஒரு ஆருயிர் நீ எனக்கு!
Oct 10, 2026,12:07 PM IST
- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
நீ சிந்திடும் புன்னகை
உன் மன்னவன் மனமதைப்
பொங்கிடும் கங்கை போல்
சிந்தையை மகிழச் செய்யும்!
நீ காட்டிடும் அன்பினில்
உன் மன்னவன் உலகது
சொர்க்கத்தை
விஞ்சி நிற்கும்!
பசியது அறியாது
புசித்திட நீ தரும்
ருசி மிகு உணவுகளால்
இவன் ஜீவிதம் வரமாகும்!
கிடைத்தற்கரிய பொக்கிஷமாய் நீ கிடைத்ததை நினைத்தால்
சந்தோச சாகரம்
இவன் மனதுக்கு!
ஆருயிர் நீ
எனக்கு!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்).