மாமன் காரன் பெத்த புள்ளே மனசைத் தொறந்து பேசும் புள்ளே!

Oct 10, 2026,11:28 AM IST

- கவிஞர் பி.எஸ்.முருகேசன், திண்டுக்கல்


வந்துரு வந்துரு 

சின்னப் புள்ளே 

வாழை மரம் 

தோப்புக்குள்ளே


மாமன் காரன் 

பெத்த புள்ளே 

மனசைத் தொறந்து 

பேசும் புள்ளே


ஆம்பளைக்கு இருபத்தொன்னு 

பொம்பளைக்கு பதினெட்டு


அரசு சொல்லும் 

வயசு புள்ளே

ஆகிடுச்சு கவலை இல்/


முரண்டு பிடிக்கும் 

சொந்தம் முன்னே 

முரசு கொட்டி

முழங்கிடுவோம்




மூடிக் கேத்த 

ஜாடி யின்னு

மூத்தோர் பேச

வைத்திடுவோம்


கார்த்திகை மாசத்திலே 

கடுங்குளிரா போச்சு புள்ளே

காட்டாங் காஃபி 

போடு புள்ளே 

கதகதப்பு தாரும் புள்ளே


மார்கழியில் பீடையென்று

மறுப்புச் சொல்ல 

வேண்டாம் புள்ளே


தை பொறந்தா 

வழி பொறக்கும் 

நல்ல நேரம் 

தடம் பதிக்கும்


மை விழியால் 

மனம் இனிக்க 

கை வளையல் 

ஓசை இட


கரம் பிடிப்பேன் 

நானும் ஒன்ன

வரம் கொடுக்கும் 

சாமி முன்னே


பாடிடுவோம் தன்ன 

நன்னே 

பரவசம்  ஆகு கண்ணே

பரவசம் ஆகு கண்ணே


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்