வா மனோரஞ்சிதமே!
Aug 25, 2026,02:00 PM IST
- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
வா வெண்ணிலவே!
உன்னைத் தேடுகிறேனே!
உந்தன் ஆகாயமே!
வா பெண் நிலவே!
உன்னைத் தேடுகிறேனே!
உந்தன் இதய மன்னவனே!
வா மனோரஞ்சிதமே!
உன்னைத் தேடுகிறேனே!
உந்தன் பூ வனமே!
வா எந்தன் தேவியே!
உன்னைத் தேடுகிறேனே!
உந்தன் தேவனே!
வா ரோஜா மலரே!
உன்னைத் தேடுகிறேனே!
உந்தன் இராஜ ராஜனே!
உந்தன் இனிய இல்லமே!
வா எந்தன் தெய்வீகமே!
உன்னைத் தேடுகிறேனே!
உந்தன் கோயிலே!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)