நேற்றல்ல இன்றல்ல எந்நாளும் உன் நினைவு!

Aug 21, 2026,05:11 PM IST

-மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


நேற்றல்ல இன்றல்ல

எந்நாளும் உன் நினைவு!

ஒன்றல்ல இரண்டல்ல 

ஓயாத பல கனவு! 


காற்றல்ல கடல் அல்ல

அதுபோல ஒரு பந்தம்!

கார்மேகம் மழை பொழியும் 

போலிருக்கும் நம் சொந்தம்


பேச்சல்ல மூச்சல்ல

உனை நினைக்காத பொழுதல்ல!

உடல் அல்ல உயிர் அல்ல 

நீ இன்றி நான் அல்ல!




முதல் அல்ல! முடிவல்ல!

நமது பூர்வ ஜென்ம  பந்தம்

பல கோடி வருடங்களாய்த்

தொடர்கிறதோ நம் சொந்தம் 


அனலாகி மழையாகி

மாறி மாறி வரும் பருவம் அல்ல!

எப்போதும் மாறாத 

நம் அன்பை எப்படிச் சொல்ல!


காற்றாகி ஊற்றாகி 

இலதாகி உளதாகி

இருக்கின்ற கடவுளை

வணங்குவோம் வா என்னவளே! 


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிரபல நடிகர் நானா படேகர் மறைவு: பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு இரங்கல்

news

அதீத அன்பு.. ஒரு நிமிடக் கதை (30)

news

தென்தமிழ் தலையங்கம்: வற்றிப்போகும் பிரான்சும் வறண்டுவரும் பூமியும்!

news

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

news

மாத்திரை கவரில் இந்தி அச்சிடப்பட்ட விவகாரம்: அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

news

25 ஆண்டுகால அரசியல் பயணம் மக்கள் கொடுத்தது...பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி பேச்சு

news

மக்களுக்கு நல்லது செய்யணும் - நிர்வாகிகளுக்கு அட்வைஸ்: அரசியலுக்கு வர போகிறாரா சிவகார்த்திகேயன்?

news

பாட்டியானாலும் பிரச்சினை!

news

"அடடா ஜல்லடை பொசுங்கிப் போச்சே.. அத்தே அத்தே".. முதல் சமையல் அனுபவம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்