இமைப் பொழுதும் நமைப் பிரியா ஆண்டவனுக்கு நன்றி !
Jul 31, 2026,02:53 PM IST
- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
எப்போதும்
இணை பிரியா
என் ப்ரிய
என்னவளே!
முப்போதும்
உனைப் பிரியா
வரம் கேட்கும் உன்
மன்னவன் நான்!
இமைப் பொழுதும் நமைப்
பிரியா ஆண்டவனுக்கு
நன்றி சொல்லி
வாழ்கிறோம் நாம்!
தனைப் பிரியாத் தாயோடு
வாழும் சேய் போல
நம்மையும் வாழ வைக்கிறான் இறைவன்!
பொருள் பிரியாச்
சொல்லோடு எழுதியக்
கவிதை போல
இனிக்கிறது நம் வாழ்க்கை!
பிரியா இன்பமே நமக்கு எப்போதுமே!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்)