- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
காதல் தீபம் ஏற்றவா?
கண்மணி தீபம் ஏற்ற வா!
என்னுயிர் நீ என மகிழவா?
இன்னுயிர் நீ என் அருகில் வா!
எந்தன் அன்பினை
உன்னிடம் சொல்லவா?
உந்தன் சம்மதம்
கொஞ்சம் சொல்ல வா!
தேவனும் தேவியும்
நாம் அல்லவா!
தேவதை நீ எந்தன்
உயிர் அல்லவா!
நான் வாழ்வது உனக்கென
நான் சொல்லவா?
நீ வாழ்வது எனக்கென
நீ சொல்ல வா!

என் நினைவிலும் கனவிலும்
நீ அல்லவா!
எனை உயிரென நினைப்பவள்
நீ அல்லவா!
உன் வாழ்வே நான்தான்
எனச் சொல்ல வா!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்)
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
{{comments.comment}}