கோடு தாண்டாத தூரம்!

Jul 29, 2026,02:38 PM IST

- ப. வினு


​அவன்

என்னைத் தோழி என்கிறான்;

நான்

அவனை என் உலகமென்கிறேன்.

​அவன் தோள்மீது

நான் சாயும் தருணங்கள்

அவனுக்கு வெறும்

நட்பின் ஆறுதல்...

எனக்கோ

ஆயுள் வரை நீடிக்கத் துடிக்கும்

காதலின் மயக்கம்!


​அவன்

எல்லாவற்றையும் இயல்பாய்ப் பேசுகிறான்,

என் கண்களுக்குள் வழியும்

காதலைத் தவிர.

அவன் விரல்கள்

என் விரல் கோர்க்கும்போது

நட்பின் கதகதப்பு மட்டுமே

அவனுக்குத் தெரிகிறது...

என் நெஞ்சில் அடித்துக்கொள்ளும்

புயலின் சத்தம்

அவனுக்குக் கேட்பதேயில்லை.




​சொல்லிவிட்டால்

இந்த நட்பும் போய்விடுமோ என்ற பயம்...

சொல்லாமல் விட்டால்

என் காதல் செத்துவிடுமோ என்ற ஏக்கம்!


​அவன் கட்டிய

நட்பு என்னும் அழகிய கூண்டிற்குள்,

சிறகுகளை விரித்துக்கொண்டு

பறக்க முடியாமல் தவிக்கிறது

என் காதல்!


(கொடைக்கானலைச் சேர்ந்த ப. வினு 3ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். கொடைக்கானலில் கார் ஓட்டுநராக வேலை செய்கிறார். தமிழ் மொழி மீதான அளவற்ற காதலால், எழுத ஆரம்பித்து இன்று படைப்பாளியாக மிளிர்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!

news

மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!

news

சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்