தேனமுதுக் குரலே தென்னங் காற்றே!

Su.tha Arivalagan
Aug 27, 2026,01:04 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


தேனமுதுக் குரலே!

தென்னங் காற்றே! 

தேன் தமிழே! 

என் தெய்வீகமே! 


வான் மழையே! 

வளர் பிறையே!

சீர் இளமைத் திறமே!

சின்னஞ் சிறு குயிலே!


மான் இனத்தின் சாயலே! 

மங்கையரில் தேவதையே!

மன்னவனின் மாதரசியே! 

மலரினும் இனிய மெல்லிசையே!




மலர் வனமே! 

மாஞ்சோலையே! 

பூஞ்சோலையில் ஒரு 

பூ மாலையே! 


என்னவளே! 

எந்தன் இனியவளே! 

வெள்ளி ரதமே!

வேந்தன் மகளே! 


சொல்லில்  அடங்காக்

குணக் குன்றே!

குறைகள் இல்லா 

ஓவியமே! 


காவியமே! எந்தன் 

கண்ணின் இமையே!

வாழ்கிறோம் நலமே! 

நம்மை வாழ்த்தட்டும் இறையே!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)