என்ன கண்டாய் என்னவளே!

Su.tha Arivalagan
Aug 28, 2026,02:46 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


கடலில் மழை பெய்தால் 

கால் காசு பிரயோஜனம் உண்டா? 

கானல் நீரால் 

தாகம் தீருமா?


கண் இல்லாதவனிடம் 

ஓவியத்தைக் காட்டினால் 

என்ன பலன

கிடைக்கும்?




காது கேட்காதவனிடம் 

காம்போதி ராகம் பாடினால் 

அதனால் என்ன 

பிரயோஜனம் உண்டு?


எழுதப் படிக்கத்

தெரியாதவனுக்கு

எதுகை மோனை பற்றி 

என்ன புரியும்?


மேற்கண்ட உதாரணங்களைப்

போலிருக்கும் என்னைக் கட்டிக்கொண்டு 

என்ன கண்டாய் என்னவளே!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)