இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
Sep 07, 2026,12:35 PM IST
- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
என் கலா
வெண்ணிலா!-இந்த
மென் கலா
என் நெஞ்சிலா!
இந்தப் பூ நிலா!
ஒரு பொன் நிலா!
வா நிலா! என்
தேன் நிலா!
வருகிறாயே என்
அருகிலா!
அழகு தேவதையே நீ
என் கண்ணிலா!
நீ வாலிபத்தில்
வந்த நிலா!
என் முதுமையிலும்
தொடரும் விழா!
கலை நிலா
சிலை விழா
என் மனதுக்குள் நீ
நிறை மாத நிலா!
மூன்றாம் பிறை நிலா
முழுமதி பூர்ண நிலா
என் வாழ்வில் பௌர்ணமியாய்
வந்த நிலா!
வான் நிலா போல்
தேயாத நிலா!
வசந்தம் ஒன்றையே
எப்போதும் தரும் நிலா!
தூய்மையான
பால் நிலா!
இந்தப் பசுபதியைக்
கரம் பிடித்த
அன்பான
சூரியகலா!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்).