"மனம் இரங்கி வா!-கோபம் மலை இறங்கி வா!"
- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
என் குணத்தினில்
ஒரு குற்றம் இல்லை!
கொண்ட குறை
ஏதுமில்லை!
வனத்தினில் இருப்பது போல்
வாழ வேண்டாமே பெண்ணே!
மனம் இரங்கி வா!-கோபம்
மலை இறங்கி வா!
பண்பட்ட நம் வாழ்க்கையிலும்
கண் பட்டுப்போனதோ! அதனால்
புண்பட்டு போனதா
உன் மனது!
குறை தீரக் கோயிலுக்குச்
செல்லலாம் என்றால்
உனையன்றி எதுவும் எனக்குத்
தெய்வீகமாய்த் தெரிவதில்லை!
கேட்பார் பேச்செல்லாம்
கேட்டுக்கொண்டிருந்தால்
பாழ் பட்டுப் போகும் தான்
மனது!
புரிதலிலே குறையில்லை
என்றால் குறைகள் எதுவும்
குறையாகத் தெரியாது!
பெரிதாகத் தெரியாது!
நாம் இருவரும் புரிந்து கொள்ள
என் தெய்வம் நீயே எனக்கு வேதம்!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்).