- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
இந்த ஸ்கூட்டரில்
பயணிக்கும் பொழுதெல்லாம்
புகுந்த வீட்டு மனிதர்கள்
மகிழ்ச்சி அடைந்தாலும்
பிறந்த வீட்டு எண்ணத்தில்
மனசு கனக்கிறது!
ஸ்கூட்டர் சக்கரம்
வேகமாகச் சுழலும் போதெல்லாம்
மனசு ஏனோ
அதில் மறைந்திருக்கும்
செருப்பில்லாக் கால்களோடு
வெயிலில் நடக்கும்

அப்பாவின் வியர்வையையும்
கண்ணீரையும்
கஷ்டத்தையும் தான்
நினைத்துப் பார்க்கிறது!
பெற்றெடுத்த உள்ளம்
கால்நடையாகச்
சுடும் தெருக்களில்
நடக்கும்போது
ஸ்கூட்டர் பயணம்
மனதைக் கசக்கிப் பிழிகிறது!
கண்ணீர் கன்னத்தில்
வழிகிறது!!
ஆனால் அங்கு என்னவோ
என்னை ஸ்கூட்டரில்
பார்க்கும்போதெல்லாம்
என் அப்பாவின் மனசு
தன கஷ்டத்தை மறந்து
இதுதான்
பெற்றெடுத்த
உள்ளத்தின்
மகத்துவம் போல!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்).
The Mask We Wear
தமிழகத்தில் தீவிரமடையும் பருவமழை...கொட்டி தீர்க்கும் கனமழை : 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு - புயலாக மாறினால் முரசு என பெயர் சூட்டப்படும்!
கனாக் கண்டேனடி!
விழுந்தாலும் வேரூன்றி நிற்பேன்! - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (6)
கட்டுமரம் வாழ்க்கை!
"சீதனமாக அப்பா கொடுத்த ஸ்கூட்டர்!"
காத்திருப்பு.. ஒரு நிமிடக் கதை (43)
Short Story: கடமையின் பின்னே ஒரு மனிதநேயம்
{{comments.comment}}