முல்லை மலரும் உனைச் சூடத் தேடுமோ!
Aug 13, 2026,03:31 PM IST
- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
தேவலோகப்
பாரிஜாதமோ!-நீ
எனைத் தேடி வந்த
இனிய சீதனமோ!
பாடி வந்த
தேவகானமோ! நீ
நான் கேட்டு ரசிக்கும்
மோகன கீர்த்தனமோ!
துள்ளித் திரியும்
மானைப் போன்றவளோ!
உனை எப்போதும் நினைக்கும்
உன் பக்தன் நானோ!
வானில் தோன்றும் நிலவு
உனக்கு ஈடாகுமோ!
வாசம் வீசும் முல்லை மலரும்
உனைச் சூடத் தேடுமோ!
புது ராகம் பாடும்
இனிய வீணை
எனக்கே
எனக்கே தானோ!
இதற்கெல்லாம் காரணம்
நான் செய்த
பூர்வ ஜென்ம
புண்ணியம் தானோ!
காலைக் கதிரவன்
வானில் வருவதும்
நம் இருவரைக்
காணத்தானோ!
கரைசேரும் என்பது
உன்னால் தானோ!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்).