நேபாளம் வெள்ளம்.. வாழத்தான் பிறந்தோம் என்று நேபாளம் வந்தோம்!

Su.tha Arivalagan
Sep 02, 2026,03:33 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


வாழ்வாங்கு

வாழ்வோம் என்று 

கனவெல்லாம்

கண்டோம் !


வாழத்தான் 

பிறந்தோம் என்று

நேபாளம் 

வந்தோம்!


வந்தது ஒரு

பெருவெள்ளம்!

மடிந்தன உயிர்கள் 

ஏராளம்!

 

வாழ்விழந்தோர் 

ஏராளம்!

நொந்து அழுதது 

பிழைத்தோர் உள்ளம்!




நாங்கள் 

வடித்த

கண்ணீரும் 

பெருவெள்ளம்! 


தாயை இழந்த 

தளிர்க் குழந்தை!

குழந்தையை இழந்த 

தாய் தந்தை !


சோதனைக்கு ஒரு 

அளவில்லை!

சொல்லி அழ ஒரு 

தோள் இல்லை!


வேதனையைக் கொட்ட 

வடிகால் இல்லை!

வேறு எங்கு முறையிட 

தெய்வமும் இல்லை!


கொத்துக் கொத்தாய்

உதிர்ந்தன உயிர்கள்!

இரக்கமில்லா எமனால் 

மீளா உறக்கத்தில் உடல்கள்!


நிலையில்லா 

வாழ்க்கையில்

நீ பெரியவனா 

நான் பெரியவனா 


என்று சில 

மனிதர்கள் 

இன்னமும் 

இவ்வுலகில்! 


அவர்கள் அறியாமையை 

என்ன சொல்ல! 

அவர்களைப் படைத்தவனை

என்ன சொல்ல!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)