என் கூற்று பொய்யும் அல்ல மிகையும் அல்ல!

Su.tha Arivalagan
Sep 25, 2026,09:53 AM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


நந்தவனம் பூப்பதெல்லாம் 

உனக்காகத்தான்!-அந்த 

நான்முகன் உனைப்

படைத்ததெல்லாம்

எனக்காகத்தான்!


பிருந்தாவனம் ஆகிய 

உன்னை எனக்குச்

சொந்தவனம் ஆக்கிய 

இறைவனின்  கருணைக்கு 

வணங்குகிறேன் அவனை!




வாழ்வில் வந்த 

கஷ்ட அலைகளைக்

கடந்து செல்ல 

நமது கப்பலின்

மாலுமி ஆனவள் நீ!


நிமிடம்தோறும் நிமிடம் தோறும் 

நினைத்துக் கொண்டே இருக்கிறேன் அன்பே

உன்னை என்றால் அது 

பொய்யும் அல்ல மிகையும் அல்ல!


என் மனோபாவத்தை 

நல்ல விதமாக மாற்றி 

அமைத்தவள் நீ!-அதனால் 

நல்வாழ்வு பெற்றவன் நான்!

வாழ்கிறேன் உன்னால் நான்!


உந்தன் பேரன்பினால் 

வாழ்வில் நலம் பெற்றேன்!

அதற்கு நன்றி என்ற

சொல்லும்  மிகச் சிறியதே!

என்னவளே என் உயிரே! 


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)