வெயில்!
Jul 28, 2026,10:29 AM IST
- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
இப்படி அடிக்கிறதே வெயில்!
இது என்ன பாலைவனமா?
இனி வாங்க வேண்டியது
ஒட்டகம் தானா!
கதிரவனுக்கு என்ன ஆயிற்று?
நம் மீது கோபமா?
இப்படி வறுத்து எடுக்கிறாரே!
இது நாம் செய்த பாவமா!
வருண பகவான் வாயு பகவான்
எல்லாம் எங்கு சென்று விட்டனர்?
கடவுளே காப்பாற்று
உன் திருவுளப்படி!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்).