- கவிஞர் பி.எஸ். முருகேசன்
ஆடியிலே காத்தடிக்க
அழகுராணி கூத்தடிக்க
ஓடி வாரா
ஆடி வாரா
ஒய்யாரமாக
கூடையிலே பூ எடுத்தா
தோராயமாக
சின்னச் சின்ன
பூ எடுத்து
சிறப்புடனே பூ
சரம் தொடுத்து

கூந்தலிலே சூடிக் கிட்டு
ஆடியும் வந்தாள்
கோலவிழி பார்வையிலே
ஜாடையும் தந்தாள்
மேடையிலே ஆடுவதா
ஓடையிலே நீந்துவதா
கோடை வெயிலில தான்
வேகுதடி மேனியுமே
தாகம் எடுக்குதடி
மோகம் வந்து தடுக்குதடி
மோகினியே நீவந்து மோதுகிறே என்ன சொல்ல
சேதி சொல்ல
நேரமில்லை
சாதி சனம்
சேரவில்லை
ஆடி வெள்ளியிலே
ஆலயம் திறந்திருக்கு
ஆவணி பிறக்கட்டும்
அதுவரைக்கும் காத்திருப்போம்
மணமேடை ஏறிடுவோம்
மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடவே
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)
Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே
பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!
Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!
அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!
கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!
கணபதி என்றிட கலங்குமே வல்வினை!
டிஜிட்டல் யுகத்துப் பறவைகள்.. கலையின் ஹைக்கூ கவிதைகள்!
பத்து வார்த்தையில் .. எட்டு.. திட்டு.. ஆனாலும் ரசிக்கிறேனே என்னவளே!
{{comments.comment}}