"நீ பூஜைக்கு ஏற்ற புஷ்பமா? நான் தான் உனக்கு இஷ்டமா?

Su.tha Arivalagan
Oct 12, 2026,10:48 AM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


நீ இந்த இராகவன்

மனம் கவர்ந்த சீதையா? 

மற்றும் இந்த மாதவன் 

மனங்கவர்ந்த இராதையா? 


நீ நம் இல்லம் எனும் கோகுலம் 

கொண்டாடும் கோதையா? 

நான் எந்நாளும் உன் அன்பில் 

மகிழும் குழந்தையா? 


நீ பூஜைக்கேற்ற புஷ்பமா?

நான்தான் உனக்கு இஷ்டமா?

முற்பிறவியில் நாம் இருவரும் 

செய்ததுதான் புண்ணியமா? 




அதனால் தான் இப்பிறவியில் 

நாம் இருவரும்

கணவன் மனைவி 

ஆனோமா?


எந்நாளும் நம் பிருந்தாவனத்தில் 

மகிழ்ச்சி தான் பொங்குமா? 

இதுதான் நாம் வாங்கி வந்த 

வரமா? 


கோடானு கோடி யுகங்கள் 

வாழ்வதுதான் நம் ஆசையா? 

அதற்காக இறைவனை 

வேண்டுவது நாம் செய்யும் தவமா!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்).