அன்பே வா! எந்தன் அருகே வா!

Oct 08, 2026,04:06 PM IST

- பசுபதி குமாரசுவாமி


அன்பே வா! எந்தன் 

அருகே வா! 

கண்ணே வா! நான் எழுதும் 

கவிதையே வா! 


பெண்ணே வா! எந்தன் 

பேரன்பே வா! 

முன்னே வா! எந்தன் 

முகிலே வா! 


முல்லையே வா! எந்தன் 

முகவரியே வா! 

மல்லிகையே வா! என் இனிய 

மாந்தளிரே வா!




பேரழகே வா! எந்தன் 

பெருமையே வா! 

சீதனமே வா! எந்தன் 

சிறப்புகளே வா!


கண்மணியே வா! அழகு

வெண் பனியே வா! எந்தன்

வேதனையை அழிக்க வந்த 

வேலவன் வள்ளியே வா! 


நற்சிந்தனையே வா! வாழ்வில் 

நலம் சூழ வா! 

நற்றமிழே வா!  

நறுமலரே வா!


பொற்றாமரையே வா!

பொன் எழிலே வா!

கொற்றவளே வா! எந்தன் 

கோதை நீயே வா! 


குறையின்றி 

வாழ்ந்திடவே வா! 

குமரனை 

வணங்கிடுவோம் வா!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்