பெண்!
Mar 07, 2026,03:36 PM IST
- எ. பானுமதி, மதுரை
கனவு காட்டினால் காய் கனியாகும்
பணிவு காட்டினால் பாறை பனியாகும்
துணிவு காட்டினால் துன்பம் தூளாகும்
உறவு காட்டினால் உலகம் ஒன்றாகும்
பரிவு காட்டினால் நல்செறிவு ஆகும்
அறிவு காட்டினால் அகிலம் வசமாகும்
முனிவு கொண்டால் நல் முடிவு ஆகும்
நிறைவு கொண்டால் நெஞ்சம் நெகிழும்
விட்டுக்கொடுத்தால் வெளிச்சம் உண்டாகும்
விடாமல் கொடுத்தால் வீடு பூச்செண்டாகும்
கட்டிக் கொடுத்தால் கரிசனம் என்றாகும்
தட்டிக் கொடுத்தால் தடைகள் தூளாகும்
இறங்கிவிட்டால் இரவு பகலாகும்
இறங்கி வந்தால் இனிமை உண்டாகும்
முன்னால் நடந்தது எல்லாம் விளங்கும்
பின்னால் நடப்பது எல்லாம் துலங்கும்
ஆக்குவதும் அழிப்பதும் அவளாலே எளிதில் நடக்கும்
அவளின்றி அணு வில்லை
அவள் இன்றி எதுவும் இல்லை
(பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)