- சு.தா.அறிவழகன்
விதி எழுதிய கணக்கை - உன்
மதி கொண்டு மாற்றி நின்றாய்!
உடல் சுமக்கும் குறையை - உன்
உயிரின் திறமையால் வென்று நின்றாய்!
முடங்கிப் போவது தடையல்ல - உன்
முயற்சிக்கு எல்லை ஏதுமில்ல!
சிறகுகள் இல்லாவிட்டாலும் - உன்
சிந்தனை வானில் தடை இல்லை!

கல்லும் கனியாகும் உன் கலைத்திறனில்!
சொல்லும் கவிதையாகும் உன் நாவினில்!
காலம் தலைவணங்கும் உன் விடாமுயற்சியில்!
வையம் வியந்து நிற்கும் உன் தனித்துவத்தில்!
குறை என்பது உடலுக்குத்தான் - அது
ஊக்கம் நிறைந்த உன் உள்ளத்திற்கு அல்ல!
தோல்வி என்பது உனக்கில்லை - நீ
தன்னம்பிக்கை செதுக்கிய வைரச் சிலை!
வானவில்லுக்கும் வளைந்தால்தான் அழகு,
உன் வாழ்வுக்கும் இந்த சவால்களே மெருகு!
நிகரற்ற சாதனை உனக்காகக் காத்திருக்கு,
நிமிர்ந்து நட... உலகம் உன் பக்கம் இருக்கு!
அலை ஓடியே போனாலும் கரை கொண்ட நுரையழகு!
Letter to my favourite toy as a kid
Day of celebrating the selfless service
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
{{comments.comment}}