+2 Exam results: பிளஸ்டூ தேர்வு முடிவுகளில்.. அரசுப் பள்ளிகள் அசத்தல்!
May 08, 2026,10:25 AM IST
சென்னை: தமிழ்நாட்டில் வெளியான பிளஸ்டூ தேர்வு முடிவுகளில் அரசுப் பள்ளிகள் பிரமாதமாக செயல்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டில் பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
இதில், பிளஸ்டூ தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்களில் 92.16 பேர் தேர்ச்சி அடைந்துள்ளளனர். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளி மாணவர்களும் தற்போது சிறப்பாக தேர்ச்சி பெற்று வருகின்றனர். கடந்த காலங்களைப் போலவே இந்த ஆண்டும் சிறப்பான தேர்ச்சியை அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.