வெளியானது பிளஸ்டூ தேர்வு முடிவுகள்.. 95.20% தேர்ச்சி.. வழக்கம் போல மாணவிகள் அசத்தல்

May 08, 2026,10:09 AM IST

சென்னை: பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. வழக்கம் போல மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.


பிளஸ் டூ தேர்வில் மொத்தம் 95.20 சதவீதம் மாணவ மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதில் மாணவியரின் எண்ணிக்கை 97 சதவீதம் ஆகும். மாணவர்கள் எண்ணிக்கை 93.19 சதவீதம் ஆகும்.


தமிழ்நாட்டிலேயே அதிக அளவாக ஈரோடு மாவட்டத்தில் 98.87 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.  சிவகங்கையில் 98.05, கன்னியாகுமரியில் 97.63, திருநெல்வேலியில் 97.84, திருச்சியில் 97.50 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.




பிளஸ்டூ தேர்வு முடிவுகள் சுருக்கமான விவரம்: 


தேர்வெழுதிய மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை : 7,91,654

மாணவியர்களின் எண்ணிக்கை : 4,18,724.

மாணவர்களின் எண்ணிக்கை : 3,72,930.


தேர்ச்சி விவரங்கள்:

மொத்த தேர்ச்சி - 7,53,694 (95.20%).

மாணவியர் 4,06,167 (97.00 %) 

மாணவர்கள் 3,47,527 (93.19 %)


மாணவர்களை விட 3.81% மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தேர்விற்கு வருகை புரியாதவர்கள்: 7,874.


கடந்த மார்ச் - 2025 பொதுத்தேர்வெழுதிய மாணாக்கர்களின் எண்ணிக்கை 7,92,494. 

தேர்ச்சி பெற்றோர் 7,53,142, தேர்ச்சி சதவீதம் 95.03%.

கடந்த ஆண்டு பொதுத்தேர்வினை விட இவ்வாண்டு தேர்ச்சி 0.17% சதவீதம் கூடுதலாக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாஜக.,வை எதிர்த்ததாலேயே ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டார்...அபிஜீத் திப்கே குற்றச்சாட்டு

news

ஜெம் வீரமணி மீது வீடியோ ஆதாரத்துடன் புகார்: காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் பரபரப்பு தகவல்

news

ராஜினாமா செய்த எம்எல்ஏ.,க்கள் தேர்தலில் மீண்டும் போட்டியிட தடை விதிக்க முடியாது

news

இடைத்தேர்தலில் தவெக.,வுக்கு ஜி.கே.வாசன் ஆதரவு...காலியாகிறது அதிமுக கூடாரம்

news

மெந்திய மசியலும் வாழைக்காய் கொழுக்கட்டையும்!

news

House Husband-களும் இருக்க முடியும்! குடும்ப அமைப்பைப் பாதுகாக்க மதுரை ஐகோர்ட் கிளை கருத்து

news

நம்மை உடைப்பவர்கள் நம்மை செதுக்கியவர்களே..!

news

சென்னை பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம்? அரசு தீவிர பரிசீலனை

news

தமிழகப் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு: சிறப்பு வகுப்புகளுக்கு தடை

அதிகம் பார்க்கும் செய்திகள்