பொகோடா: இனிமே யாராவது பொறணி பேசினா வெட்டித்தனமா பேசிட்டிருக்கியேன்னு யாரும் கேக்காதீங்க.. அதை ஒரு தொழிலாக மாற்றி காசு பார்த்து கலக்கி வருகிறார் கொலம்பியாவைச் சேர்ந்த மிரியம் என்ற 67 வயதுப் பெண்மணி.
மிரியமின் வேலை என்ன தெரியுமா.. அக்கம் பக்கத்து வீடுகளில் நடக்கும் விஷயங்களை கறந்து கொள்வது. பிறகு சம்பந்தப்பட்டவர்களை அணுகி இதை வெளியில் சொல்லாமல் இருக்க காசு கொடு என்று கேட்டுப் பெறுவது. இப்படி ரகசியங்களை விற்று விற்றே, அதைத் தொழில் போல மாற்றி, இரண்டு வீடுகள் வாங்கி விட்டாராம் மிரியம்.
தன்னை ஒரு "ப்ரோஃபெஷனல் காசிப் பிசினஸ்வுமன்" அப்படின்னு கெத்தா அறிவிச்சு அசத்திட்டிருக்காரு மிரியம். எப்போதும் கைல ஒரு நோட்டுப் புத்தகம் வச்சிருப்பாங்களாம். தெருவுல போறவங்க வர்றவங்க பேசுறது, நேரம், நபர் பேரு எல்லாத்தையும் அதுல நோட் பண்ணிக்குவாங்க. அதுமட்டுமில்லாம, ஆதாரத்துக்காக போட்டோக்கள், தகவல்களை வீட்ல ஒரு போர்டுல ஒட்டி வச்சிருக்காங்களாம்.

சின்ன சின்ன விஷயங்களுக்கு 5,000 முதல் 10,000 கொலம்பியன் பெசோ (நம்மூர் பணம் சுமார் ரூ. 100 - ரூ. 200).
ரொம்பவே ரகசியமான, பெரிய விஷயங்களுக்குக் கட்டணம் ஜாஸ்தியாம். பெரும்பாலும் கள்ளக்காதல் குறித்த சமாச்சாரங்களைத்தான் அதிகமாக விற்கிறாராம் மிரியம்.
ஒருத்தர் தன் மனைவிக்குத் தெரியாம பண்ற விஷயத்தை மறைக்கவே, மிரியமுக்கு சுமார் ரூ 14,000 வரைக்கும் பணம் கொடுத்துள்ளாராம்.
என்னங்க ஆண்ட்டி இப்படி அசத்தறீங்களே என்று அவரிடம் கேட்டால், "காசிப் பேசுறது என்னோட ரத்தத்துலயே ஊறிப்போச்சு. ஆனா என்னோட தகவல்கள் ரொம்ப ஆத்தன்டிக்கா இருக்கும். ஆதாரம் இல்லாம நான் எதையுமே சொல்ல மாட்டேன். ஒவ்வொரு நல்ல ஏரியாவுலயும் ஒரு காசிப் பேசுறவங்க இருப்பாங்க... உங்க ஏரியாவுல அப்படி யாரும் இல்லைனா, அப்ப கண்டிப்பா நீங்களாதான் இருப்பீங்க!" அப்படின்னு போட்டுத் தாக்குகிறார்.
நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா.. நம்ம ஊரில் இல்லாத ரகசியமா, பொறணியா.. சம்பாதிக்க ஆரம்பிக்கப்பா.. ஆரம்பிங்கம்மா!
சூப்பர் ஆண்டி.. பொறணி பேசியே 2 வீடு வாங்கி செட்டிலான கொலம்பியா மிரியம்!
நோட்டிஃபிகேஷன் மனிதர்கள் – போன் வைப்ரேட் ஆனா மட்டும் போதாது மச்சா!
சட்டசபையில் கலகல.. முதல்வர் விஜய்யை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று மத்திய அரசு சொல்லவே இல்லை.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்
Monday Motivation: இயற்கையைக் கொ(வெ)ல்லும் செயற்கை.. நல்லதல்ல விரைந்து விழிப்படைவோம்!
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
அழகான ஆகஸ்ட் மாதம்.. என்னென்ன ஸ்பெஷல் இருக்கு தெரியுமா!
Short Story: சாந்தா!
எந்த மலரும் சொல்லிக் கொள்வதில்லை!
{{comments.comment}}