பாக்கெட்டுல போன் ரொம்ப அமைதியா இருக்கும்... ஆனா தொடையில லேசா ஒரு வைப்ரேஷன் உணர்வு வரும். "அடடா! க்ரஷ் மெசேஜ் அனுப்பிட்டாளோ, இல்ல கம்பெனில ஆஃபர் கொடுத்துட்டாங்களோ?" அப்படின்னு கண்ணிமைக்கும் நேரத்துல பாக்கெட்டை தொட்டு, போனை எடுத்துப் பார்த்தா... அங்கே ஒரு சுண்டைக்காய் நோட்டிஃபிகேஷன் கூட இருக்காது!
அப்போதான் புரியும்... வைப்ரேட் ஆனது போன் இல்லை, நம்ம தொடை நரம்புன்னு!
இது நோயா? இல்லை தனித் திறமையா?
அறிவியல் பூர்வமா இதை பாண்டம் வைப்ரேஷன் சின்ரோம் அதாவது Phantom Vibration Syndrome அப்படின்னு சொல்றாங்க. ஆனா, நம்ம ஊர் பாஷையில சொன்னா இது "இல்லாத போனுக்கு ஆசைப்படுற வியாதி!"
இங்கே ஒரு நியாயமான கேள்வி வருது: "போன் சத்தம் கேட்கலனாலும், கை தானா அன்லாக் பண்ணி இன்ஸ்டாகிராமை ஸ்க்ரோல் பண்ணுதே... இது நம் விரல்களுக்கு வந்த தனித் திறமையா, இல்ல மூளைக்கு வந்த கோளாறா?"
நிஜமாவே யோசிச்சுப் பாருங்க...
நாம தூக்கத்துல எழுந்திருக்கோமோ இல்லையோ, கை தானா போனை தேடி அன்லாக் பண்ணிடுது. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், யூடியூப்னு எல்லாத்தையும் ஒரு சுத்து சுத்திட்டுதான் மூளையே "அட, நாம முழிச்சுட்டோம்!" அப்படின்னு சிக்னல் தருது.

விரல்களுக்கு இருக்குற இந்த ஸ்பீட் அண்ட் அக்யூரசி பார்த்தா, கூடிய சீக்கிரம் நம்ம விரல்களுக்கு தனியா ஒலிம்பிக் தங்கப் பதக்கமே கொடுக்கலாம்!
நீங்க ஒரு நோட்டிஃபிகேஷன் அடிமையா இல்லையான்னு உங்களுக்கு இப்ப சந்தேகம் வருதா.. கீழ்க்கண்ட அன்றாட அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா.. கங்கிராட்ஸ்ங்க.. நீங்க அடிமையாகிட்டீங்க!
அதாவது போன்ல எந்த சத்தமும் வரலைனாலும், ஒவ்வொரு 30 செகண்டுக்கும் ஸ்கிரீனை ஆன் பண்ணிப் பார்க்குறது.
பக்கத்து வீட்டுக்காரர் மிக்ஸி போட்டாக்கூட, "அட, நம்ம போன் வைப்ரேட் ஆகுதோ?"னு பாக்கெட்டை தடவிப் பார்க்குறது.
ஆப் மேல அந்த சின்ன சிகப்பு டாட் (Notification Badge) பார்த்தா, அதை கிளியர் பண்ற வரைக்கும் தூக்கமே வராது!
இதெல்லாம்தாங்க அறிகுறிகள்..!
கொஞ்சம் கேப் விடுங்க பாஸ்!
நோட்டிஃபிகேஷன் வரலைனா நம்ம உலகம் ஸ்தம்பிச்சு போயிடுற அளவுக்கு நாம போனுக்கு அடிக்ட் ஆயிட்டோம்ங்கிறதுதான் நிதர்சனம்.
இனிமேலாவது போன் பாக்கெட்ல வைப்ரேட் ஆகும்போது, அது போன் இல்லை, நம்ம மனசுதான் அலைபாயுதுனு நினைச்சுட்டு, கொஞ்ச நேரம் போனை ஓரமா தூக்கிப் போட்டுட்டு நிஜ உலகத்தைப் பார்ப்போம்! இல்லாட்டி அடுத்து... "நோட்டிஃபிகேஷன் வரலைனு கை நடுங்குதுப்பா!" அப்படின்னு டாக்டர் கிட்டதான் போக வேண்டியிருக்கும்!
World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!
சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!
மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!
தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!
மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!
முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை
தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?
{{comments.comment}}