மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று மத்திய அரசு சொல்லவே இல்லை.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்

Aug 10, 2026,11:21 AM IST

சென்னை: மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் எந்த சுற்றறிக்கையும் பிறப்பிக்கவே இல்லை என்று முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப் பதிவு:


சட்டமன்றத்தில் பேசிய இடது கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ஒரு புரிதல் இல்லாமல் மத்திய அரசு இதில் தலையிட முடியாது என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட வேண்டும் என்று தமிழ் தாயை பெருமை சேர்க்கும் இடத்தில் கூட மத்திய அரசின் மீது உள்ள வன்மத்தை உமிழ்ந்தார் என்பது தான் எனது கருத்து.


ஏனென்றால் மத்திய உள்துறை அமைச்சரிடம் இருந்து வந்த சுற்றறிக்கை அந்தந்த மாநில பாடல் மூன்றாவது பாடப்பட வேண்டும் என்று எங்கேயுமே குறிப்பிடப்படவில்லை. அந்த சுற்றறிக்கை என்ன சொல்கிறது என்றால் புதிதாக இப்பொழுது வந்தே மாதரம் பாடல் சேர்க்கப்படுவதால் வந்தே மாதரம் பாடல் தேசிய கீதத்திற்கு முன்னால் பாடப்பட வேண்டும் அது முழுவதுமாக பாடப்பட வேண்டும் என்றுதான் சொல்லப்பட்டு இருக்கிறது.


அதனால் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதல் இடம் அளிக்கப்படுவது நம் எல்லோருக்கும் பெருமைதான். ஆனால் இங்கே சிலர் ஏதோ உள் துறை அமைச்சகம் மாநில பாடலை மூன்றாவதாக பாட வேண்டும் என்று வலியுறுத்துவதாக பேசுவது சரியல்ல.




இன்று திருக்குறள் நமக்கு பெருமை சேர்க்கிறது என்று தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் இன்று தான் சொல்கிறார். ஆனால் திருக்குறளை உலக அரங்கில் எடுத்துச் சென்றவர் நம் பாரத பிரதமர் என்பதை நான் பெருமையோடு இங்கே நினைவு கூறுகிறேன்.


அதுமட்டுமல்ல புதிய கல்விக் கொள்கையில் கூட மாநில மொழிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதுவுமே இங்கே தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை தான் நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் தமிழிசை செளந்தரராஜன்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சட்டசபையில் கலகல.. முதல்வர் விஜய்யை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

news

மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று மத்திய அரசு சொல்லவே இல்லை.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்

news

Monday Motivation: இயற்கையைக் கொ(வெ)ல்லும் செயற்கை.. நல்லதல்ல விரைந்து விழிப்படைவோம்!

news

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

news

தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை

news

முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு

news

முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது

news

கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை

news

இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?

அதிகம் பார்க்கும் செய்திகள்