அச்சத்தால் வீரம் கெடும்.. அறிவற்றார் ஆக்கம் கெடும்.. ஔவையின் பொன்மொழி 60 (9)

Nov 10, 2026,11:09 AM IST

- கவிக்கடல் அ.ல.ஏகலைவன்


கவிக்கடல் அ.ல.ஏகலைவன் எழுதி வரும் அவ்வையின் ஆத்திசூடி 60 தொடரில் இன்று மேலும் இரு மொழிகளைப் பார்க்கப் போகிறோம்.


அச்சமுறும் கேடர்கள் ஆக்கம் அறியாரே

இச்சமூகக் கேடும் இவர்களே - எச்சமிவரை

துச்சமென தூரயிடல் ஏற்நிரையாம் துட்டரின் 

அச்சத்தால் வீரம் கெடும்


விளக்கவுரை




அச்சத்தைக்  கொள்வோரால் எக்காரியமும் ஆகாது ; இவர்களே சமூகத்தின் கேடர்கள் ;துச்சமென இவரை தூர எறிதல் நன்மை. ஏனெனில் அச்சத்தால் வீரமும் கெடும்.


--


ஆன்றோரும் சான்றோரும் ஆற்றல் அறிவுடையார்

வான்மறை வள்ளுவம்போல் வாழ்வறிவார் - பான்மை

குறியிழந்தோர் வாய்ப்புகள் கூடாதாம் என்றும்

அறிவற்றார் ஆக்கம் கெடும்


விளக்கவுரை


அறிவுடைய சான்றோரும் ஆன்றோரும் ஆற்றல் பெறுவார் ; வள்ளுவன்போல் மேன்மை உருவார் ; இப்பண்பின் குறியிழந்தோர் வாய்ப்புகள் கூடாதாம் ; ஏனெனில் அறிவற்றார் ஆக்கம் கெடுமாம். 


(மதிப்புறுமுனைவர் கவிக்கடல் அ.ல.ஏகலைவன், கிராம நூலகர், பிடாகம் ஊராட்சி, எலவனாசூர்கோட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்