எனது பூமி!
Mar 21, 2026,01:34 PM IST
-ப.ந.ராஜேஷ் கண்ணா
எனது பூமி என்று
எவரும் மார்தட்டிக் கொள்ளக் கூடாது.
அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது
ஆதரவாய் அனைவரையும் அரவணைத்துக் கொள்ளும்.
ஆம் எனது பூமி ஓர் உயிர் கோளம்.
அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது.
இயற்கை வளங்கள் இனிமையாய் தழைத்தோங்க,
ஈகை உள்ளத்தோடு நாம் செயல்படுவோம்.
எனது பூமியை அழிக்க நினைக்கும்,
எண்ணற்ற சக்திகளின் உக்ரவத்தை
குறைப்பேன்.
பூமி மாசடைதலை தவிர்க்கப் போராடுவேன்.
புரியாதவர்களிடம் புரியும் படி எடுத்துரைப்பேன்.
வருங்கால சந்ததிகளுக்கு,
வஞ்சனை இல்லாமல் விட்டுச்செல்வேன்.
(ப ந ராஜேஷ் கண்ணா, பட்டதாரி ஆசிரியர், ஆங்கிலம், அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளி, திருவூர், திருவள்ளூர் மாவட்டம்)