திருநாவுக்கரசரை அசைத்துக் கூட பார்க்க முடியாத கொடும் விஷம்
- கலைவாணி கோபால்
ஒரு துளி பட்டாலே ஆளைத் கொல்லும் அந்த விஷம் .கூட, திருநாவுக்கரசரிடம் தோற்றுவிட்டது.
சமணர்கள்.. சோதனையில் சிவன் அருள் இன்றி இது சாத்தியம் இல்லை. என்பது மன்னருக்கு புரிந்தது. ஆனால், அந்த கூட்டம் மன்னனை சிந்திக்க விடவில்லை.
ஏனென்றால்? சமணர்கள் ,வெப்பம் தாங்குதல், நீரின்றி உணவின்றி வாழ்தல், விலங்குகளை அடக்குதல், நஞ்சினை முறித்தல், என பயிற்சிகளை கற்று அறிந்தவர்கள். தந்திரங்களையும் கற்று அறிந்தவர்கள். இதனால், அதற்கு அப்பாற்பட்ட ஒரு தண்டனையை கடைசியாக தர வேண்டும் என சமணர்கள் மன்னரிடம் கூறினர்.
கடைசியாக, ஒரே ஒரு வாய்ப்பினை மட்டும் பரிசீலிக்கலாம். என்று சமணர்கள் சொன்னதனால் மன்னனும், அதற்கு கட்டுப்பட்டு அவர்கள் சொன்ன தண்டனையை நிறைவேற்ற முடிவுக்கு வந்தான். அதாவது திருநாவுக்கரசரை கல்லோடு கட்டி கடலில் தள்ளும் முடிவுக்கு வந்தார்கள் .இது சமணர்கள் பயிற்சியில் இல்லை. என்பதை அவர்கள் உறுதியளித்தனர். மன்னனும் கடைசியாக சமணர்களின் பேச்சுக்கு சம்மதித்தார்.
சமணர்கள், கூறியபடியே ஒரு பெரிய கல்லில் உறுதியான கயிற்றினால் கட்டப்பட்டு திருநாவுக்கரசர் படகில் கொண்டு செல்லப்பட்டு கடலில் தள்ளினர். பின் சமண கும்பல் இத்துடன் நாவுக்கரசர் கதை முடிந்தது. என்ற நிம்மதியில் பெருமூச்சு விட்டு கரைக்கு திரும்பியதும் ,அந்த நிம்மதி சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை.
திருநாவுக்கரசர் பெருமான் ,"சொற்றுணை வேதியன் சோதி வானவன்" என்ற பதிகத்தை பாடியபடியே எந்த ஒரு ஆபத்தும் இன்றி ,'தோனி போல் கல் மிதக்க' அந்த அலை அப்படியே அவரை அடித்து வந்து கரையில் சேர்த்தது.
இன்றும், அந்த இடம் "கரையேறிய குப்பம்" என்று அழைக்கப்படுகிறது. அங்கு ,ஒரு ஆலயமும் உண்டு. எந்த திருப்பாதிரி புலியூரில் அவர் சமணர் ஆக்கப்பட்டாரோ? அதே ஊரின் அருகே சைவராக கடலில் இருந்து கரை ஒதுக்கினார் என்பது சிறப்பு.
கடைசி சோதனையில் தோற்ற சமணர்கள். அத்தோடு...... தோல்வியினை ஒப்புக்கொண்டு, நாட்டை விட்டு அகண்டனர். மகேந்திரவர்மன் அதே ,இடத்தில் சைவத்தை ஏற்று, அவரும் சைவத்தை ஏற்று, அரசமதம் என்பதை சமணத்தில் இருந்து சைவமாக்கினார்.
திருப்பாதிரி புலியூரில் இருந்த சமணபாழிகளை அழித்துவிட்டு, பாடலீஸ்வரர் என்ற ஆலயத்தை நிர்மாணித்தான். அப்படியே, திருவதிகை ஆலயத்தை பெரிதாக கட்டி அங்கு குணபரீஸ்வரம் என பெயரிட்டார் .முழு சைவ நாடாக தன் பல்லவ நாட்டை அறிவித்தார். பல்லவ நாடு மறுபடியும் சைவத்தை அடைந்தது.
மகேந்திரவர்மனின் மகனே நரசிம்ம பல்லவர் (மாமல்லன்) மாமல்லபுரம் என்னும் அழகிய கலைக்கூடத்தை அமைத்து, அந்த கடற்கரையில் கைலாசநாதர் ஆலயத்தையும் கட்டி, அழகிய இந்து சிற்பங்கள் எல்லாம் செதுக்கி வைத்தவர். இதற்கெல்லாம், மூல காரணம் திருநாவுக்கரசர் பெருமான்.
அதற்குப்பின் மன்னனிடம் விடைபெற்ற திருநாவுக்கரசர். திலகவதி அம்மையாரிடம் விடை பெற்று, ஆலயம் ஆலயம் ஆக சிவனை தரிசிக்கவும், பாடவும் விரும்பினார். அப்படித்தான் தேவாரம் தொடங்கிற்று..... திருவதிகை ஆலயத்தில் முதன் முதலாக தொடங்கப்பட்ட தேவாரம் ....பல இடங்களில் திருநாவுக்கரசர் பாடப்பட்டது.
(திருநாவுக்கரசர் வரலாறு தொடரும்)