செந்தமிழ் சொல் மலராகிய பாமாலை பாடிய தன்மையால் நின் பெயர் திருநாவுக்கரசு!

Jul 31, 2026,04:12 PM IST

- கலைவாணி கோபால்


தம்பி சைவத்தை விடுத்து சமணத்திற்கு சென்றதால், சிவன் எப்படி இருந்தாலும் திரும்ப கொண்டு வருவார் .என்ற நம்பிக்கையில் திலகவதியார் கோயிலில் பணி செய்து வந்தார். சமணக் கோலத்தில் இருக்கும் தம்பியை காண பிடிக்காது. சைவத்திற்கு திரும்பி வந்தால் மட்டுமே, அவனைக் காணுவேன் என்ற வைராக்கியத்திலும் வாழ்ந்து வந்தார்.


சமணத்தில் கொடிகட்டிப் பறந்த மருள் நீக்கியாருக்கு காலங்கள் கடந்து ஓடிக் கொண்டே இருந்தன.. அப்போது, அவருக்கு வயது 65... கொடிய சூலை நோய் ஆட்கொண்டது. சமணத்தில் அவர்களிடம் உள்ள எல்லா மந்திர தந்திரங்களையும், மருந்துகளையும், தந்து பார்த்தனர் இதற்குப் பிறகும் இவருக்கு சரியாகாது என்ற நிலையில் விட்டுவிட்டனர்.


அப்பொழுதுதான் மருள் நீக்கி யாருக்கு தனக்காகவே வாழ்ந்த தனது அக்காவின் நினைவு வந்தது. தான் இறக்கும் முன்பு ஒரு முறையாவது அக்காவை பார்த்து விட வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் குடி கொண்டது. அந்த காஞ்சி மடத்திலிருந்து எப்படி அவரை சந்திப்பது என்ற நிலையில் , அவருக்காக அமர்த்தப்பட்ட சமையல் பணியாளரை ரகசியமாக அழைத்து தன் அக்காவை கூட்டி வரச் சொன்னார். 


திருவதிகை விரட்டானேஸ்வர கோயிலில் பணிபுரிந்த அக்காவை சந்தித்து பணியாளர் விஷயம் சொன்னபோது, எக்காரணம் கொண்டும் சமணத்தில் இருப்பவனை நான் வந்து பார்க்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.


ஆனாலும், மனது தங்காமல் சிவனிடம் தன் தம்பிக்காக விண்ணப்பம் வைத்தார். அவரின் நம்பிக்கையும் ,தொண்டும் வீண் போகாத வகையில் அன்று இரவு பெருமான் கனவில் தோன்றி கண்டிப்பாக மருள் நீக்கியாரை சூலை நோய் கொடுத்து அவரை சைவத்தில் ஆட்கொள்வோம் என்றும் கூறினார்.




அதற்கு ஏற்றார் போலவே, மருள் நீக்கியாரும் காஞ்சி சமண மடத்திலிருந்து ரகசியமாக தப்பித்து அக்காவிடம் வந்து சேர்ந்தார். ஏனென்றால், சமணர்கள் (தர்மசேனர்) அவர் அக்காவை சந்திப்பதையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 


திலகவதியாரும் தம்பியை அந்த கோலத்தில் கண்டவுடன் மிகவும் வருந்தினார். இளமைப் பருவத்தில் சென்ற மருள்நீக்கியார். முதுமையான 65 வயதில் முதிர்ந்த கோலத்தில், தர்ம சேனர் என்னும் பெயரில் திரும்பி வந்தது. திலகவதி அம்மையாருக்கு  பெரும் துயராக இருந்தது .


இருந்தாலும், தம்பி சூலை நோயால் துடிப்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. திருவதிகை விரட்டாணம் பெருமானை வேண்டிக் கொண்டு அவர் நெற்றி நிறைய விபூதியை வைத்து. அவர் வயிற்றிலும் விபூதியை பூசியபோது சிறிது நேரத்தில் அவர் நோய் காணாமல் போனது. சமணர்களின் எந்த மருந்தாலும் சரி ஆகாத சூலை நோய், திருவதிகை விரட்டாணம் பெருமானின் திருநீற்றில் சரியானதை நினைத்து....


அப்போது,தான் தர்மசேனருக்கு தான் செய்த மிகப்பெரிய தவறு என்னவென்று. தெரிய வந்தது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த ,சக்தி வாய்ந்த சைவத்தை விடுத்து சமணத்தில் கால் வைத்தோமே! என்று மிகவும் வருந்தினார்.


அதன் பின் சமணத்தின் அடையாளங்களை தூக்கி எறிந்தார். திருவதிகை ஆலயத்தை சுற்றி வந்து இறைவனை விழுந்து வணங்கினார். மருள்நீக்கியாரை  ஆனந்தமாக  பார்த்த திலகவதியார் தம்பியின் தலையை அன்பாக கோதிவிட்டார் .


அப்போதுதான் திருநாவுக்கரசர் (கூற்றாயினவாறு விவக்ககிலீர்) முதல் பாடலை பாடினார். தம்பி சிவனை பாட வேண்டும் என்ற திலகவதி அம்மையாரின் எண்ணம் நிறைவேறிற்று.


எனினும் சமணப் பேரான தர்மசேனன் என்பதை மாற்றி சைவப் பெயர் அவருக்கு வைக்க வேண்டும் என்று நினைத்தபோது வீரட்டாணத்தின் பெருமானே (ஒலியின் மூலமாக "செந்தமிழ் சொல் மலராகிய பாமாலை பாடிய தன்மையால் நின் பெயர் "திருநாவுக்கரசு' எனும்  பெயர் 'உலகு எங்கும் சிறக்கட்டும், என பெருமானின் அசரீதி  ஒலி உரக்க சொல்லிற்று 


அன்றிலிருந்து அவர் திருநாவுக்கரசு எனும் சிறப்பு பெயரால் அழைக்கப்பட்டார்.


(திருநாவுக்கரசர் கதை தொடரும்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!

news

மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!

news

சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்