விருந்துக்கு வாங்க .. ஒரு நிமிடக் கதை (38)

Su.tha Arivalagan
Oct 17, 2026,01:41 PM IST

- பூரணவள்ளி சேகர்


நல்லூர் ஓர் அழகிய கிராமம். அந்த ஊரைச் சுற்றிலும் விருந்துக்கு வாங்க என்று போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அந்த ஊரில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர் அழைக்கிறார்.


அதில் வருகிற ஞாயிற்றுக்கிழமை  பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை விருந்து நடைபெறும். மக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பு இருந்தது.


மக்களை அமர வைத்து சாப்பிட வைக்க வேண்டும் என்று நினைத்த தலைவர் மழையின் காரணமாக உணவைப் பொட்டலமாக வழங்க முடிவெடுத்தார். விருந்தில் பிரியாணி வழங்குவார்கள் என்று தகவல் கசிந்தது.




ஞாயிறன்று மக்கள் கூடினர். உணவு ஒரு வண்டியில் வந்தது. பொட்டலமாகக் கட்டப் பட்டிருந்தது. தேவையான பொட்டலங்களைப் பெற்றுக் கொண்டனர் மக்கள். அவர்களின் மனதில் பிரியாணி பற்றி சிறிது சந்தேகம் இருந்தது.


பொட்டலத்திலிருந்து கரம் மசாலா வாசம் தூக்கலாக இருந்தது. வீட்டிற்கு வாங்கி வந்து பொட்டலங்களைப் பிரித்த போது உள்ளே காய்கறி கலந்த பிரியாணியும் குருமாவும் இருந்தன.


புரட்டாசி மாதம் என்பதை  மறந்து பிரியாணி என்றவுடன் மட்டன் சிக்கன் பிரியாணி எதிர்பாராத்தவர்கள் ஙே.. என்று விழித்தனர்.


(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)