அச்சச்சோ கரண்ட் போயிருச்சே.. கவலைப்படாதீங்க.. இந்தா பிடிங்க.. இன்ஸ்டன்ட் சட்னி!
- பாவை.பு
சட்னி அரைக்கலாம் என்று எல்லாத்தையும் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அதை அரைக்கப் போவோம்.. அப்பப் பார்த்து கரண்ட் போய்ரும்.. அல்லது அவசரமாக கிளம்ப வேண்டியிருக்கும், சட்னி அரைக்க நேரம் இருக்காது.. என்னடா செய்வது என்று குழப்பம் வரும்.
இப்படி சட்னி வைக்க நேரம் இல்லாத போது அல்லது அரைக்க மின்சாரம் இல்லாத போதும் நமக்கு கை கொடுப்பதுதான் இந்த உடனடி சட்னி. இந்த சட்னியை அவசரத்துக்கு வச்சுக்கலாம்.. அதுக்காக சுவையெல்லாம் காம்பரமைஸ் ஆகாதுங்க, சூப்பராகவே இருக்கும்.
அதுதாங்க சுவை மிகுந்த பருப்பு பொடி சட்னி.. வாங்க கிச்சனுக்குள் போவோம்.
தேவையான பொருட்கள்
துவரம்பருப்பு 1 கப்
காய்ந்த மிளகாய் 10 (தேவைக்கேற்ப)
சீரகம் 1டீஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
பெருங்காயம் சிறிது
இவை அனைத்தையும் எண்ணெய் இல்லாமல் வெறும் வாணலியில் வறுத்து. அனைத்தும் ஆறியதும் உப்பு சேர்த்து ரவை பதத்தில் அரைத்து, ஒரு காற்று புகாத டப்பாவில் (airtight container) வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும் போது அதாவது நான்கு நபர்களுக்கு 2 டேபுள் ஸ்பூன் வீதம் ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.. பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுத்தம்பருப்பு, ஒரு காய்ந்த மிளகாய் பொடியாக நறுக்கிய வெங்காயம் பொட்டு வதக்கிய பிறகு அதில் கரைத்து வைத்துள்ள பொடியை அதில் ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்..
குறிப்பு.... இந்த சட்னி கெட்டியாக இல்லாமல், சிறிது தண்ணிராக இருந்தால் நன்றாக இருக்கும். ஆக தேவைக்கு ஏற்றவாறு தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். இட்லி தோசைக்கு நன்றாக இருக்கும்.. இந்த பொடியை இரண்டு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.