- ந. லட்சுமி
சென்னை: எங்கு பார்த்தாலும், மழை, பனியாக இருக்கிறது. யாரைக் கேட்டாலும் இருமல், சளி என்று புலம்புகிறார்கள்.. எதைச் சாப்பிட்டாலும் சளி போகலைன்னு கவலையும் இருக்கிறது.. என்ன செய்தாலும்.. அட இருங்க இருங்க.. லிஸ்ட்டு பெருசா போய்ட்டே இருக்கு.. இதுக்கெல்லாம் ஒரு சூப்பர் நிவாரணத்துடன்தான் வந்திருக்கோம்.
சளி இருமலைப் போக்க அருமையான குழம்பு இது.. அதுதான் மிளகு குழம்பு.. இதை வச்சுச் சாப்பிடுங்க, உடம்பு எப்படி சரியாகுதுன்னு மட்டும் பாருங்க.. வாங்க கிச்சனுக்குள் போகலாம்.
தேவையான பொருட்கள்:

மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி விதை – 2 டீஸ்பூன் கோபுரமாக
பூண்டு – 15-20 பல்( தோலுடனே கழுவி எடுத்துக் கொள்ளலாம் )
சின்ன வெங்காயம் – 6–8 (அல்லது பெரிய வெங்காயம் 1)
புளி – எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
பெருங்காயம்- சிறிய கட்டி
தக்காளி பழம்- 3
காரம் வேண்டுமென்றால் காய்ந்த மிளகாய் - 2
தேங்காய் துருவல் - சிறிது
வெல்லக்கட்டி - சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிது
நல்ல எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவைக்கு ஏற்ப
செய்முறை:
1. மசாலா தயார் செய்ய:
மிளகு, சீரகம், கொத்தமல்லி விதை, பூண்டு, தேங்காய் துருவல், தக்காளி பழம் -1, பெருங்காயம், மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து வதக்கவும், பின் இவற்றை நன்றாக அரைக்கவும்.
2. புளி கரைசல்
புளியை தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
3. தாளிக்க
கடாயில் எண்ணெய் ஊற்றி வெந்தயம் போட்டு வெடிக்க விடவும். பின்னர் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், தக்காளி பழம் சேர்த்து வதக்கவும்.
4. குழம்பு செய்வது
அரைத்த மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது வதக்கவும். புளி கரைசல் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
5. கொதிக்க விடவும். பிறகு மிதமான தீயில் 10–15 நிமிடம் கொதிக்க விடவும். கடைசியில் வெல்லக் கட்டி சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும் இறக்கவும்.
தாளிப்பு:
சிறிது எண்ணெய் கடாயில் விட்டு கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொட்டவும்.
சூடாக சாப்பிடவும்
சூடான சாதத்துடன் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். சளி, இருமல், ஜீரணத்திற்கு நல்லது.
(ந. லட்சுமி, மன்னார்குடி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
விஜய் பிரசாரம்... ஈரோட்டில் தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை
தங்கம் விலை இன்றும் உயர்வு... புதிய உச்சத்தில் வெள்ளி விலை உயர்வு!
மார்கழி 02ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 02 வரிகள்
Healthy Cooking: சுவையான மிளகு குழம்பு செய்வது எப்படி?
சிந்தனைத்துளிகள்.. ரகசியமான வாழ்கைப் பாதையில் மாற்றம் ஒன்றே மாறாதது!
ஆணுக்கு சமமாய் நானும் தான்!
The Power of Hope... நம்பிக்கையின் சக்தி.. பலம் தரும்.. சவால்களைச் சந்திக்க தைரியம் தரும்!
கோவிந்தனை கொண்டாடுவோம்.. கோகுலத்தில் விளையாடுவோம்!
வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆறுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.. ஏன் தெரியுமா?
{{comments.comment}}