மும்பை : இன்று இந்தியப் பங்குச்சந்தைகள் பெரும் எழுச்சியுடன் தொடங்கின. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் முதலீட்டாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, வர்த்தகத் தொடக்கத்திலேயே மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' (Sensex) 2,300 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் 'நிஃப்டி' (Nifty) 700 புள்ளிகளுக்கு மேல் அதிரடியாக அதிகரித்தது.
பங்குச்சந்தை உயர்வுக்கு காரணம் :

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை தற்போதுள்ள 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளார். இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் சாதகமாகப் பார்க்கப்படுகிறது.இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த ஒப்புக்கொண்டதை அடுத்து, இந்த வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த ஒப்பந்தத்தால் ஜவுளி, தரைவிரிப்புகள் மற்றும் தோல் பொருட்கள் சார்ந்த ஏற்றுமதி நிறுவனங்கள் அதிக லாபம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 83,970 புள்ளிகளிலும், நிஃப்டி 25,811 புள்ளிகளிலும் வர்த்தகமானது. குறிப்பாக அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் இண்டிகோ போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிக லாபத்தை ஈட்டின."மேக் இன் இந்தியா" தயாரிப்புகளுக்கு அமெரிக்காவில் வரி குறைக்கப்பட்டிருப்பதற்குப் பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் கிடைத்த பெரிய வெற்றி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம் இந்தியப் பொருளாதாரத்திற்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும் என்றும், ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் கார்ப்பரேட் வருவாய் கணிசமாக உயரும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
தமிழகத்தை உலுக்கிய.. தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில்.. தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை
விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி: தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பு!
புதிய படங்களை 7 நாட்களுக்கு 5 காட்சிகள் திரையிடலாம்.. தியேட்டர்களுக்கு விஜய் ஹேப்பி நியூஸ்!
TVK: குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 3 பேர் திடீர் ராஜினாமா - தவெக.வில் இணைந்ததால் பரபரப்பு!
காலியான 4 எம்எல்ஏ தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவி.. தவெக.,விற்கு அடிக்கிறதா ஜாக்பாட்?
ADMK metldown: வேகமாக கரையும் அதிமுக.. மொத்தம் 47 - இபிஎஸ் 27; வேலுமணி 17; ராஜினாமா 3!
ஓங்குகிறதா எடப்பாடி பழனிசாமியின் கை? .. அடுத்தடுத்து வீட்டிற்கு படையெடுக்கும் எம்.எல்.ஏ-க்கள்
சிஎம் விஜய் ஸ்டேட்டா.. வட மாநிலங்களிலும் வேகமாக பரவியிருக்கும் தமிழ்நாட்டு அரசியல்..!
{{comments.comment}}