- அ. கோகிலா தேவி
சென்னை: தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் அல்லது தேங்காய் பால் சாப்பிடுவதால் பல நன்மைகள் ஏற்படுவதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தினமும் 40 முதல் 50 கிராம் பச்சை தேங்காய் சாப்பிட்டால் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை வருவதில்லை. குறிப்பாக புதிதாக தேங்காயை உடைத்து அந்த சில்லை சாப்பிடுவது நல்லது. அதுதான் நல்ல பலனைக் கொடுக்கும்.
இப்படி பச்சைத் தேங்காயைச் சாப்பிடுவதால், இதயம், தலைமுடி, சருமம், வயிறு போன்றவற்றிற்கு நன்மை உண்டாகும். உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து செரிமானப் பிரச்சினையை சரி செய்கிறது. வயிற்றுப் புண்ணுக்கு தேங்காய்ப் பால் நல்லது செய்யும் என்று சொல்வார்கள்.

தேங்காயில் உள்ள நார்ச்சத்து மற்றும் அமினோ அமிலம் நல்ல கொழுப்புக்களை அதிகரித்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். மேலும் சரும ஆரோக்கியத்தில் இதன் பங்கு மேலானதாகும் . முடி மற்றும் சரும பராமரிப்பு பொருள்களில் தேங்காயின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.
இயற்கையாகவே சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
அதேசமயம், முக்கியமாக நீங்கள் மனதில் கொள்ள வேண்டியது - அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கேற்ப இதனை அளவுடன் எடுத்துக் கொண்டு ஆரோக்கியமான வாழ்வினை வாழ்வோம்.
(அ.கோகிலா தேவி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
Cauvery River water Issue: காவிரி நீர் பிரச்சனை எப்போது துவங்கியது? .. இதற்கு என்ன தான் தீர்வு?
முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் : கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்
டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்...கைது செய்யவும் தடை
மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்...தவறவிட்டால் அபராதம்
காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு
2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்: 3 நாடுகளின் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்
ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: பலியானோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு!
மேகதாது அணை விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!
{{comments.comment}}