- கலைவாணி கோபால்
சென்னை: புட்டு பிடிக்காதவர்களே இருக்க முடியாது. டேஸ்ட்டான ஒரு உணவு. தமிழர்களின் வாழ்க்கையில் புட்டுக்கு தனி இடமே உண்டு. புட்டுக்காக கடவுளே மண் சுமந்த வரலாற்றையும் பார்த்த பூமி இது. ஆனால் இப்போது அதிலிருந்து சற்றே வேறுபட்ட ஒரு புட்டு பார்க்கப் போகிறோம்.
அதுதாங்க முள்ளங்கி புட்டு. இது நீங்க நினைப்பது போல ஸ்வீட் புட்டு கிடையாதுங்க.. மாறாக இது ஒரு அருமையான சைட் டிஷ்தான். வாங்க பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

1. முள்ளங்கி
2. கடலை பருப்பு
3. வெங்காயம்
4. சோம்பு
5. பச்சை மிளகாய்
6. வெங்காயம்
7. தேவையான அளவு எண்ணெய்
8. தேவையான அளவு உப்பு
கடலைப்பருப்பை 30 நிமிடங்கள் ஊறவைத்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்பு முள்ளங்கியை தோல் சீவி கழுவி அதையும் தூளாக அரிந்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்
இப்போது, வானலியில் எண்ணெய்விட்டு சோம்பு, பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு கலந்து வதக்கவும்.
பின்பு, அரைத்து வைத்த முள்ளங்கியை சேர்க்கவும், அதில் சிறிதளவு மஞ்சள் பொடியும் சேர்த்து வதக்கவும். முள்ளங்கி பாதி வந்தவுடன், அரைத்த கடலைப்பருப்பை அதனுடன் சேர்க்கவும், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
பின்பு அடுப்பை மிதமான தீயில் வைத்து, 20 நிமிடங்கள் (நடுவில் கிளறிக் கொண்டு இருக்கவும்) விட்டால் இரண்டும் ஒன்றுடன் ஒன்று நன்கு கலந்து முள்ளங்கி புட்டு தயார்!
இதை சப்பாத்தி, ரசம் சாதம், காரக் குழம்பு ஆகியவற்றுக்கு சேர்த்துச் சாப்பிடலாம். பக்காவான காம்பினேஷன் ஆக இருக்கும்.
(கலைவாணி கோபால், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
Cauvery River water Issue: காவிரி நீர் பிரச்சனை எப்போது துவங்கியது? .. இதற்கு என்ன தான் தீர்வு?
முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் : கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்
டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்...கைது செய்யவும் தடை
மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்...தவறவிட்டால் அபராதம்
காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு
2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்: 3 நாடுகளின் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்
ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: பலியானோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு!
மேகதாது அணை விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!
{{comments.comment}}