சீமைக்கருவேல மரங்களை அகற்ற அதிரடி உத்தரவு: உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு

Mar 18, 2026,08:43 PM IST

மதுரை: தமிழ்நாடு முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


தமிழகம் முழுவதும் நிலத்தடி நீரை உறிஞ்சி, சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை மிக முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.


அதன்படி, தமிழகத்தில் உள்ள அரசு நிலங்கள், நீர்நிலைகள், காப்புக்காடுகள் மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை வேரோடு அகற்றத் தமிழக அரசு விரிவான திட்டத்தை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும். இந்த மரங்களை அகற்றும் பணிகளைக் கண்காணிக்க மாவட்ட வாரியாகக் குழுக்களை அமைக்க வேண்டும். அகற்றப்பட்ட இடங்களை மீண்டும் சீமைக்கருவேல மரங்கள் வளராதவாறு பராமரிக்க வேண்டும்.




சீமைக்கருவேல மரங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், நிலத்தடி நீர் மட்டத்தைக் காக்க இந்த நடவடிக்கை அவசியம் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மேலும். சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படும் இடங்களில் அந்தந்தப் பகுதிக்கு ஏற்ற நாட்டு மரக் கன்றுகளை நட்டு வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.


சீமை கருவேல மரங்களை அகற்ற வட மாவட்டங்களுக்கு ஒய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன், தென் மாவட்டங்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.செல்வம் கண்காணிப்பு அலுவலராக செயல்படுவர்  என்றும், எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து 39 உத்தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியில் நீடிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்

news

கொளத்தூர் எம்எல்ஏ., வி.எஸ்.பாபு எப்படி இருக்கிறார்? நேரில் சென்று விசாரித்த முதல்வர் விஜய்

news

தலைமைத் தேர்தல் ஆணையர் மீது எழுந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்

news

GEM Veeramani POCSO Case: ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை

news

ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய நிதியமைச்சகம் அதிரடி அறிவிப்பு

news

ஜெம் வீரமணி.. திமுக ஆட்சியில் வழக்கை நீர்த்துப் போகச் செய்தது கண்டனத்துக்குரியது - சீமான்

news

சர்வதேச சைகை மொழிகள் தினம்.. காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கான தினம்

news

பக்கத்தில்தான் மின்ஊழியர்கள் போராட்டம்.. அவர்களை ஏன் பார்க்கலை.. டிடிவி தினகரன் கேள்வி

news

Beautiful things don't ask for attention

அதிகம் பார்க்கும் செய்திகள்