விரி பொழில் சூழ் குன்றையார்.. விறன்மிண்ட நாயனார்.. 63 நாயன்மார்கள் வரலாறு

Mar 18, 2026,03:30 PM IST

- கலைவாணி கோபால் 


"விரி பொழில் சூழ் குன்றையார் விறன் மிண்டருக்கு அடியேன்"என்று சுந்தரரின் அன்பு  மொழிக்கு சொந்தமானவர்.


மூவேந்தர்கள் ஆண்ட அந்த தமிழகத்தில் மேற்கு மலை நாடு சேர நாடு என்றும், ஒரு பகுதி மலைகள் நிரம்பியதால் மலைநாடு எனவும் அழைக்கப்பட்ட  நிலத்தைச் சார்ந்தவர்கள் தமிழ் மொழி மற்றும் மலையாளம் என பின்னாளில் அது தனி மொழியாகவும் தனி மாநிலமாகவும் மாறிற்று.


அப்படி ,...அந்நாளில் கேரளாவில் இருந்த மிக சொற்பமான வேளாளர்களில் ஒருவர் விரல்மின்ட நாயனார். இது அவரின் இயற்பெயர் அல்ல.. காரணப்பெயர் மட்டுமே. விரல் மிண்டர் என்றால் மகாவீரமானவர், ஊக்கமானவர், உறுதியானவர் என்பது பொருள். 


திருச்செங்கனுர் என்று அழைக்கப்பட்ட ஊரில் பிறந்து, வளர்ந்து ,விவசாயம் செய்து கொண்டிருந்தவர். வேளாள மரபில் வந்தவர் விரல் மிண்ட நாயனார். அவரின் மிகச்சிறந்த குணமாக கருதப்பட்டது. அவரின் சிவபக்திக்கு அவரை மட்டுமே உதாரணமாக கூறக்கூடிய அளவுக்கு மாபெரும் சிவ பக்தர். அது மட்டும் அல்லாமல் சிவனே வழிபட வேண்டும் எனில் முதலில் அவரது அடியாரையே வழிபடல் சிறப்பு என்ற அளப்பரியா சிந்தனையில் தன்னை வழிநடத்தி சைவத்தொண்டு புரிந்து வாழ்ந்தவர். 


'சிவனடியார்களை வணங்கி விட்டு தான் சிவனை வணங்குவேன்' என்பது அவ்வாடியாரின் கொள்கையாக இருந்தது.

ஏனெனில், அடியார்கள் இல்லையெனில்.. ஆண்டவனின் கருணையும் சக்தியும் எப்படி வெளியே தெரியும்? அடியார்கள் இறைவனை பிரதிபலிக்கும் பிம்பங்கள் எனச் சொல்லி அடியார்களை வணங்கி வந்தவர். 




உதாரணமாக,...ஒரு நல்ல ஓவியனாக இருக்கலாம். ஆனால் அவன் வரைந்து காட்ட வண்ணமும் சுவரும் அவசியம். அதுபோல இறைவனின் கருணையை வெளிப்பட, சக்திகள் அறிய அடியார்கள் மிக அவசியம் என்பதை கருத்தில் கொண்டு வாழ்ந்தவர். 


அடியார்கள் ஆண்டவனின் தங்கங்கள், ஆண்டவன் செதுக்கும் சிலைகள், அவர்கள் இல்லாத ஆண்டவன் பெருமை விளங்காது.. என்பதை பெரும் நிலையாக தன் மனதில் கொண்டவர். அதே போல், ஒருவன் தன்னை அடியார் என்று ஒருவனும் போலியாக விரல் மிண்டரிடம் ஏமாற்றவும் முடியாது.


அக்காலத்தில் சோழ நாட்டிற்கு தொழில் தொடர்பாக செல்லும்போது முதல் காரியமாக அவர் செய்வது அடியார்களை தேடி தரிசிப்பதும் அவர்களை சந்தித்து கொண்டாடிய பின் சிவனை தரிசிப்பதும் அவரின் வழக்கமான ஒன்றாக இருந்தது. இதற்காக ஒவ்வொரு முறையும் அவர் தொழில் தொடர்பாக வரும்போதும் ஆரூர், சிதம்பரம், மதுரை, திருவாரூர் போன்ற இடங்களில் உள்ள சிவ ஆலயங்கள் அவருக்கு பிடித்தமான இடமாக இருந்தது .


அப்படி ஒரு முறை அவர் திருவாரூர் சென்று இருந்தபோது, அங்கு தேவாசிரிய மண்டபம் என்ற ஒரு மண்டபம் இருந்தது. இன்றும் அது அங்கு உள்ளது. மண்டபத்தில் அமர்ந்து அடியார்களின் தொண்டுகள் பற்றியும், அவர்கள் செய்த மாபெரும் சிவ பணிகள் பற்றியும் பேசுவதும் வழக்கமாகக் கொண்டிருந்தார். 


அப்படி ஒரு நாள் தேவா சிரிய மண்டபத்தில் அமர்ந்திருந்து சிவனடியார்களை பற்றி சிந்திக்கும் போது, சுந்தரர் பெருமான் அவ்வழியாக புன் சிரிப்பால் பார்த்து , அடியார்களை வணங்காமல், சிவனை வணங்க உள்ளே சென்றபோது, அடியார்களை வணங்காத ஒருவன் இருப்பானே' ஆனால் அவன் அடியாரே அல்ல . இன்று கோபத்துடன் சுந்தரரை பார்த்து கேள்வி எழுப்பினார்.


காரணம்.... வேண்டும் என்று சுந்தரர் அடியார்களை வணங்காது உள்ளே சென்றார் என விரல் மிண்டர் நினைத்தார். ஆனால், சுந்தரர் பெருமானும் அவர்கள் அனைவரும் வயதில் மூத்தவர்கள் அவர்கள் ஏதோ உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். அதை நாம் இடையூறு செய்யக்கூடாது என்று நினைத்தார். 


ஆனால் விரல்மின்ட நாயனாரோ'அடியார்களை மரியாதை செய்து வணங்காமல் போகும் இவனா சிவ பக்தன்"இவனை எல்லாம் தன் பக்தன் எனச் சொன்னால் அந்த சிவனும் புறகு" சிவனை விலக்கி வைப்போம் என்று பொருள் அல்ல, அப்படி ஒரு அடியாரும் சொல்லவும் முடியாது. கருவறையினை விட்டு சிவன் அகலட்டம், புறம் செல்லட்டும் என்ற பொருளில் சொன்னார்.


விரல் மிண்டரின் மிகக் கொடிய வார்த்தைகளை கேட்டு மனம் நொந்து நடந்தார் சுந்தரர். இறைவனிடமே சென்று முறையிட்டார். என்னால் உன்னையும் பழிக்கு ஆளாக்கினேனே என்று சிவனிடம் கதறினார். இதில் அடியார்கள் பாதி பேர் எனக்கு யார் என்றே தெரியாதே என்ன செய்யட்டும் என்று சிவனிடமே சுந்தரர் கேள்வி எழுப்பினார்.


அனைத்து நாடகத்தையும் ரசித்துக்கொண்டிருந்த சிவபெருமானொ , இதற்கு தீர்வு உண்டு. நீ அடியார்களை அடி எடுத்து பாடுவாயாக என்று சொன்னார். நான் எப்படி பாடுவது எனக்கு இதில் யார் என்று பாதிப்பே தெரியாது என்று சுந்தரர் வாதிட. சுந்தரருக்கு முதன்முதலாக "பித்தா"  என்ற அடியெடுத்து கொடுத்த சிவபெருமனே, இப்போதும் தில்லைவா அந்தணர் முதலாக என்ற தொகை அடியார் நூலை சுந்தரர் பாடும்படி அடி எடுத்துக் கொடுத்தார்.


"தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" என்ற பாடலை சுந்தரர் பெருமான் பாட ஆரம்பித்தார். அதில் 63 நாயன்மார்களையும் பாடி முடித்த பின், நான் என் மகள் அனைவருக்குமே அடியார்க்கும் அடியேன். என்று பாடி முடித்தார்.  இதில் என்னவென்றால் பாதி அடியார்கள் யார் என்று தெரியாத சுந்தருக்கு சிவனே அவர் உருவில் வந்து அதில் 60 நாயன்மார்களுக்கும் அடியேன் என்று அவரை பாட வைத்தார். 


இருந்தாலும், விரல் மிண்டர் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திருநீறு பூசிய அனைவரையுமே அடியாராக கருதிய மெய்ப்பொருள் ஆரும் ,நானும் ஒன்றாய் என்று சுந்தரரிடம் வாதாட ஆரம்பித்தார்.  அங்கிருந்தவர்கள் அனைவருமே சுந்தரரை பாராட்டினர். திருவாரூரில் பிறந்தார்கள் எல்லாருக்கும் அடியேன்.என்ற இவரின் வார்த்தைகள் நீங்கள் மயங்கி இவருக்கு புகழாரம் சூட்டுகிறீர்கள் என்று அனைவரிடமும் சண்டை இட்டு, இங்குள்ள அடியார்கள் பொய் என சொல்லி இனி திருவாரூரில் கால் வைக்க மாட்டேன் என சொல்லி திருவாரூரை விட்டு சென்றார்.


அதற்குப் பின் திருப்பயணங்கள் வருவதும் ஆண்டிமடத்திலேயே தங்குவதும் சிவத்தொண்டு புரிவதுமாக சில காலங்கள் சென்றன. கோபப்பட்டாலும் இவரின் உண்மையான சிவபக்தியை வெளிப்படுத்த நினைத்த சிவபெருமான். அவரின் வீட்டில் எப்போதும் சிவனடியாருக்கு உணவ வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனாலும், அதில் திருவாரூரில் இருந்து வருபவர்கள் என்று சொன்னால் ஓட ஓட அவர்களை விரட்டி அடித்து பொருத்தும் குணமும் விரல் மிண்டர் இடம் இருந்தது.


விளையாட்டை ஆரம்பித்த பெருமானுக்கு தெரியாதா யாரை எப்படி செதுக்குவது என்று, எப்படி வழி கொண்டு வருவது என்றும் அவருக்கு தெரியும். அதன்படி பெருமான் ஒரு நாள் விரல் மிண்டர் வீட்டிற்கு உணவருந்த சென்றார். அப்போது நாயனார் இல்லாததால் அவர் என் மனைவி அடியாருக்கு உபசரித்துக் கொண்டிருந்தார். 


வந்தவர் எந்த ஊர் என்ற விசாரிக்க, அவரின் மனைவியோ அடியாரிடம் ஊரின் பெயர் சொல்ல வேண்டாம் என்று சொல்லியும், வந்தது நம் சிவபெருமான் ஆயிற்றே, நான் திருவாரூர் அடியான் என்று சொல்ல, அதுமட்டுமல்லாமல் நான் சுந்தரரின் நண்பனும் கூட என்று அடியார் சொல்ல நாயனாருக்கு சுந்தரர் என்றாலே பிடிக்காது அதிலும் அவரது நண்பன் உறவு என்று சொன்னபோது பாத்திரம் கொப்பளித்து அவரை துரத்த ஆரம்பித்து விட்டார் 


எனது கொடுவாலை ஏந்தி அவரை எவ்வளவு துரத்தினார். நம் பெருமானோ தூரத்தில் வரும்போது மெதுவாகவும், அவர் நெருங்கி வரும் போது வேகமாகவும் ஓடத் தொடங்கி கடைசியில் திருவாரூர் எல்லையில் நாயனாரை கால் வைக்க வைத்து விட்டார். 


"திருவாரூரில் நான் கால் வைக்க மாட்டேன் " என்ற சபதம் செய்த நாயனாரை திருவாரூர் எல்லைக்குள் கொண்டு வந்து சேர்த்து விட்டார் நம் பெருமான். அடியாரை மதிக்கத் தெரியாத ஊரில் என் கால் படுவதா என வேதனைப்பட்ட நாயனார் தன் காலையை வெட்டிக் கொண்டார். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது காலை வெட்டிக்கொண்டு அவர் விழுந்திருந்த நேரம் வானில் விடை மேல் பார்வதியுடன் காட்சி கொடுத்த சிவன் அவரை வாழ்த்தினார். அவர் வைராக்கியத்தில் நின்றதை வாழ்த்தி தன் கண்களுக்கு எல்லாம் தலைவர் ஆக்கினார்.


இரண்டா நாயனாரின் சீற்றம் நக்கீரையவே போன்றதே, சுந்தரரை பற்றி அறிந்தும் அவர் செய்தது தவறு என்பதை பகிரங்கமாக சாடினார். அதன் விளைவாகவே இன்று நம் கையில் தொகையடியார் பாடல் கிடைத்தது.  இது பெருமானின் விளையாட்டு என்று வேறு எதுவாக இருக்கக்கூடும். அதனால் மட்டுமே இன்று நாம் 63 நாயன்மார்களையும் பெரிய புராணம் மூலம் நாம் அறிவதற்கு, சுந்தரர் பெருமான் அளித்த தொகை நூலில் முதல் நூலாகக் கொண்டு பெரியபுராணம் இயற்றப்பட்டது. 


தேவாசிரிய மண்டபத்தில் தன் அன்பு நண்பன் சுந்தரர் வரும்பொழுது விரன் மின்ட நாயனார் மூலமாக அடி எடுத்து கொடுக்க திருத்தொண்டர் தொகை பாடப்பட்டது. அது சுந்தரர் பாடியதே அல்ல உலக கண்களுக்கு அது சுந்தரர் பாடியது போல் தெரிந்தாலும், முழுக்க பாடியது சாட்சாத் சிவபெருமானே, நான் எப்படி பாடுவேன் என்று சொல் முன்னால் தவிர்த்து நின்றவர் யார் எனக்குத் தெரியும் என்று சொன்னவர்? எப்படி 60 பேர் பற்றியும் பாட முடியும்.


சுந்தரர் பெருமான் பாடியது 60 பேரை பட்டி மட்டுமே, என்னால் சேர்க்கப்பட்டது தான் ஆரூரர் நம்பி, மற்றும் அவர் பெற்றோர் இருவர் அவர்களை சேர்த்து 63 நாயன்மாராகளாக பெரிய புராணமாக தந்தவர் சேக்கிழார் பெருமான். அப்படி பெரிய புராணம் தோன்ற முதல் காரணமாக இருந்தவர். நம் விரல் மிண்ட நாயனார். இவரின் குருபூஜை நாளானது சித்திரை திருவாதிரை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. 


கேரள மாநிலம் செங்கனூரில் இருக்கும் மகாதேவர் ஆலயத்தில் விரல் மிண்டர் நாயனாருக்கு ஆக சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. அங்கு பெரியபுராணமும் வாசிக்கப்படுகிறது. அதுபோல் முக்தித் தளமான திருவாரூர் ஆலயத்தில் அந்த தேவாசிரிய மண்டபத்தில் அவர் நினைவாக அன்று பெரிய புராணம் பாடப் பெற்று அவரின் ஒப்பில்லா சிவபக்தி நினைவு கூறப்பட்டு வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக

news

என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?

news

Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!

news

பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!

news

அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!

news

கண்ணும் கண்ணும் நோக்கினால்!

news

அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?

news

ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)

news

Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. விளக்கேற்றிய விரல்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்