நாளை வெளியாகிறது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை

Mar 18, 2026,08:43 PM IST

சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளைத் தயார் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் (NTK) தேர்தல் அறிக்கை நாளை (மார்ச் 19) வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாளை சென்னையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நடைபெறும் சிறப்பு நிகழ்வில் இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளார்.


நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே இந்த முறையும் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிடுகிறது. தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சி ஏற்கனவே அறிவித்து, வேட்பாளர் தேர்வை முடித்து, இறுதி வேட்பாளர் பட்டியலையும் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு பல வாரங்களுக்கு முன்பே அறிவித்து விட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலக்க வாக்குச் சதவீதத்தை எட்டிய அந்தக் கட்சி, இந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் முனைப்பில் உள்ளது.


இதற்கு முந்தைய தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு 8 சதவீதம் ஓட்டு வங்கி வைத்துள்ள நாம் தமிழர் கட்சி, இந்த முறை விஜய்யின் தவெக.,வின் புதிய வரவால் பெரும் தாக்கத்தை சந்திக்கும் என பலரும் கூறி வருகின்றனர். அனைவருக்கும் வீடு, மகளிர் உரிமைத் தொகை, வேலைவாய்ப்பில் முன்னுரிமை, பெண்கள் பாதுகாப்பு என பல விதமான அதிமுக, திமுக மட்டுமின்றி தவெக.,வும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிவிப்புக்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.


தேர்தல் அறிக்கையில் எதிர்பார்க்கப்படுபவை:




ஒவ்வொரு தேர்தலின் போதும் நாம் தமிழர் கட்சி வெளியிடும் தேர்தல் அறிக்கை, மற்ற கட்சிகளிடமிருந்து மாறுபட்டு, 'மாற்று அரசியல்' மற்றும் 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' ஆகியவற்றை மையமாகக் கொண்டு அமையும். இந்த 2026 தேர்தலுக்கான அறிக்கையிலும் சில முக்கிய அம்சங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது:


வேளாண்மை புரட்சி: விவசாயத்தை அரசுப் பணியாக்குவது மற்றும் இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை.


கல்வி மற்றும் மருத்துவம்: அனைவருக்கும் சமமான, தரமான இலவச கல்வி மற்றும் மருத்துவத் திட்டங்கள்.


சுற்றுச்சூழல் பாதுகாப்பு: மணல் கொள்ளை தடுப்பு மற்றும் நீர்நிலை பாதுகாப்பு குறித்த தீர்க்கமான முடிவுகள்.


பொருளாதாரக் கொள்கை: தன்னிறைவு பெற்ற கிராமப் பொருளாதாரம் மற்றும் புதிய வரி விதிப்பு முறைகள்.


சீமான், இந்த அறிக்கையில் இளைஞர்களைக் கவரும் வகையிலும், தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையிலும் என்னென்ன புதிய திட்டங்களை முன் வைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. தேர்தல் அறிக்கை வெளியீட்டைத் தொடர்ந்து, கட்சியின் அடுத்தகட்ட தேர்தல் பிரச்சாரப் பயணத்தை சீமான் முறைப்படி அறிவிக்க உள்ளார். இது நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!

news

Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக

news

என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?

news

Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!

news

பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!

news

அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!

news

கண்ணும் கண்ணும் நோக்கினால்!

news

அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?

news

ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)

அதிகம் பார்க்கும் செய்திகள்