சென்னை : திமுக கூட்டணிகள் அனைத்துமே கடந்த தேர்தலை விட இந்த முறை கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கின்றன. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகே தொகுதி பங்கீட்டை முடிவு செய்யும் திமுக.,விற்கு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் துவங்கி அனைத்து கட்சிகளுக்குமே திமுக முதலில் முடிவு செய்ததை விட கூடுதல் சீட்டுக்களையே ஒதுக்கி வருகிறது. அதுவும் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட பிறகு தான் முடிவு எட்டப்பட்டு வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் 2026 :
தமிழக சட்டசபை தேர்தல் 2026 வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மார்ச் 30ம் தேதி முதல் தமிழக தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கி விடும். ஏறக்குறைய இன்னும் 12 நாட்களே மீதம் உள்ளது. அதற்குள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை பேசி இறுதி செய்ய வேண்டும். திமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்த வேண்டும். இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட வேண்டும். ஆனால் கூட்டணி கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்டு முரண்டு செய்வதால், அவர்களை சமாளிக்கவே திமுக.,விற்கு நேரம் சரியாக உள்ளது.
திமுக கூட்டணி தொகுதி பங்கீடு :

இதுவரை முடிவாகி உள்ள திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டின் படி,
காங்கிரஸ் - 28
மதிமுக - 4
சிபிஐ - 5
கொமுக - 2
மமக - 2
இமுலீ - 2
மொத்தமுள்ள 243 தொகுதிகளில் இதுவரை 43 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகள் கேட்ட நிலையில் இன்று அவர்களுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கி, ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 8 தொகுதிகளை கேட்டு வருவதாகவும், அவர்களுக்கு 6 தொகுதிகளை ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதே போல் விசிக 10 தொகுதிகளை கேட்பதாகவும், அவர்களுக்கு 8 தொகுதிகளை ஒதுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. தேமுதிக.,விற்கு திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள் என்பது பற்றிய விபரம் எதுவும் இதுவரை தெரியவில்லை.
விசிக, தேமுதிக.,விற்கு எத்தனை சீட்?
தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6, விசிக.,விற்கு 8, ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 43 தொகுதிகள் ஆகியவற்றை சேர்த்தால் 57 தொகுதிகள் கூட்டணிக்கே போய் விடும். தேமுதிக.,விற்கு 5 தொகுதிகள் என்று வைத்தால் கூட 62 தொகுதிகள் போய் விடும். மீதமுள்ள 172 தொகுதிகளில் தான் திமுக போட்டியிட முடியும். ஒருவேளை திமுக முடிவு செய்துள்ள தொகுதிகளுக்கு ஒத்துக் கொள்ளாமல் கூடுதல் தொகுதிகளை விசிக, தேமுதிக, சிபிஎம் கட்சிகள் கேட்டு பெற்றால் திமுக போட்டியிடும் தொகுதிகள் மேலும் குறையும்.
திமுக.,விற்கு நெருக்கடியா?
2021 சட்டசபை தேர்தலில் 173 தொகுதிகளில் திமுக போட்டியிட்ட நிலையில், இந்த முறை கூட்டணி கட்சிகளின் அழுத்தம் காரணமாக அதை விட குறைவான எண்ணிக்கையிலான இடங்களிலேயே திமுக போட்டியிட வேண்டிய நிலை ஏற்படும். 160 முதல் 170 இடங்களில் திமுக போட்டியிட்டு 120 இடங்களில் தனியாக வெற்றி பெற்று விட்டால் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். ஒருவேளை 116 இடங்களில் வெற்றி பெற்றால் கூட கூட்டணி கட்சிகளின் ஆதரவை மட்டுமே நம்பி இருக்கும் நிலை திமுக.,விற்கு ஏற்படும். அப்படி நடந்தால், ஏற்கனவே ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என கேட்டு வந்த கூட்டணி கட்சிகள் திமுக.,விற்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
{{comments.comment}}